Breaking News

வருமான வரி விடுப்பு மசோதா பாரளுமன்றத்தில் தாக்கல் !

வருமான வரி விடுப்பு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த உடன், ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் முன்னெடுத்துச் செல்லும் விவாதங்களுக்கு கால அளவை நிர்ணயித்த அரசு, கடந்த வெள்ளியன்று வருமான வரி விடுப்பு மசோதாவை மேல் மன்றத்தில் தாக்கல் செய்தது.இறுதி வாக்கு எண்ணிக்கையை Prime Minister Scott Morrison கண்காணித்தார்.

குறைந்த வருமான விரியின் அளவு 445 டாலர்களிருந்து 700 டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.19 சதவீத தனிப்பட்ட வருமான வரியின் அதிகபட்ச அளவு 37,000 டாலர்களிலிருந்து 45,000 டாலர்களாக உயரும்.32 சதவீத தனிப்பட்ட வருமான வரியின் அதிகபட்ச அளவு $90,000 டாலர்களிலிருந்து $120,000 டாலர்களாக உயரும்.

வரிசெலுத்துவோரின் வருமானத்தில் இருந்து சரியான அளவு தொகை நிறுத்தப்படுவதற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.
வணிகங்களுக்கான முக்கிய வரி மாற்றங்களை தாக்கல் செய்ததால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து இந்த பேரிடரில் இருந்து நம் நாட்டை மீட்டெடுக்கும் என்று திரு Morrison தெரிவித்தார்.

இந்த மசோதாவை விரைவில் செயல்படுத்தியதற்காக Senate Leader Mathias Cormann-ஐ பாராட்டினார் Morrison.
அரசு இந்த மாற்றங்களை கொண்டு வருவதற்கு Labor உதவி செய்தது Cross Bench Senators மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த மசோதாவை ஆராய தனக்கு சரியான நேரம் ஒதுக்கப்படவில்லை என்று விவாதத்தின் போது Independent Senator Rex Patrick தெரிவித்தார்.மேலும் தொழிலாளர் கட்சியின் marketing-ற்கு தாம் உதவப் போவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மசோதா அதிக வருமான வரி செலுத்துவோர்க்கு பயன்படும். அதே சமயம் அரசு JobSeeker மற்றும் jobkeeper-க்கு வழங்கும் பணத்தை ரத்து செய்துள்ளது என்று Green Senator Larissa Waters தெரிவித்துள்ளார்.மேலும் இதை விட சிறப்பான திட்டம் இந்த சமூகத்திற்கு தேவை என அவர் அறிவுறுத்தினார்.