Breaking News

வட NSW-வில் Narrabri திட்டத்திற்கு,சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், உள்ளூர் மக்களும் கடும் எதிர்ப்பு !

Santos எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் பரிந்துரைத்த Narrabri நிலக்கரி எரிவாயு திட்டம் NSW independent planning commissionஆல் 134 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Pilliga காடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களில் நிறுவப்பட உள்ள 3.6 பில்லியன் டாலர் மதிப்பு திட்டதிற்கு எதிராகப் போராடும் உள்ளூர் மக்களிடையே, இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டம் பொருளாதார ரீதியாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் பயன் இல்லை என்று Narrabri விவசாயி Stuart Murray தெரிவித்துள்ளார்.மேலும் பல வருடங்களாக இதனை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறேன் எனது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லாலே விவசாயி Robyn King, Coonamble stock and station agent David Chadwick, இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் கோலா கரடிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் அபாயம் இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இவர்களுடன் க்ரீன் பீஸ் ஆஸ்திரேலியா , NSW Greens MP Cate Faehrmann, Independent MP Justin Field , Energy expert Dr Madeline Taylor, நாட்டின் பெண்கள் சங்கம் போன்ற பலர் இத்திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் BUSINESS NSW மற்றும் ஆஸ்திரேலிய தொழிலாளர் சங்கம்,இத்திட்டத்தை வரவேற்றுள்ளது. இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.

இயற்கை எரிவாயு கட்டமைப்பு APA குழுவும் இந்த ஒப்புதலை வரவேற்கிறது. Narrabriலிருந்து புதியதாக 460 கிலோமீட்டர் எரிவாய் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அனைத்து இல்லங்களுக்கும், வணிகங்களுக்கும் வழங்கும் முயற்சி தொடரும் என்று தெரிவித்துள்ளது.