Breaking News

வங்கி விதிமீறல் காரணமாக westpac வங்கிக்கு $ 1.3 பில்லியன் அபராதம் !

வங்கி விதிகளை மீறிய குற்றத்திற்காக westpac வங்கிக்கு 1.3 பில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளனர்.
இது ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே அதிகமான அபராதத் தொகை எனவும் கூறுகின்றனர்.

westpac வங்கி மீதான இந்த குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே விசாரணையில் இருந்து வருகின்றது, தற்போது இந்த விசாரணையின் முடிவில் AUSTRAC (Australian Transaction Reports and Analysis Center )மற்றும் westpac இடையில் அக்ரீமெண்ட்டுகள் ஏற்றுக்கொள்ள பட்டதாகவும் அதன் அடிப்படையில் தான் இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.இந்த செய்திகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

நாட்டின் சட்டங்களையும்,விதிகளையும் மதிக்காமல் பணம் மோசடியிலும், பயங்கரவாததிலும் தொடர்பில் இருந்ததாகவும், உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற தவறியதாகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.இந்த தகவல்கள் தற்போது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விதிமீறல்கள் அனைத்தும் 19.5 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச நிதி பரிமாறுவது பற்றியும் $ 11 பில்லியன் அதிகமாக கொடுக்க வேண்டிய ஆதாரங்கள் பற்றியும் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று இந்த குற்றச்சாட்டுகள் கூறுகின்றது.

இதன் மூலம் மில்லியன் தடவை வங்கிகளுக்கு என்று கொடுக்கப்பட்ட விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் westpac வங்கி சட்டத்தை மீறி உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

” westpac வங்கி மூலம் இந்த மாதிரியான குற்றச் செயல்கள் நடந்துள்ளன என்று நாங்கள் நம்பவில்லை,” என்று திருமதி ரோஸ் கூறியுள்ளார். கடந்த ஆண்டு காமன்வெல்த் வங்கியின் அபராதத்தை அடுத்து ,westpac வங்கியையும் மட்டும் அல்லாமல் இன்னும் பல அமைப்புகள் பண மோசடி தடுப்பு தேவைகளுக்கு தூண்டியதாகவும் அவர் கூறியுள்ளார். காமன்வெல்த் நடவடிக்கைகளுக்குப் பின்னர் சந்தேகமான பல விஷயங்களும் நம்பமுடியாத பல செய்திகளும் எங்களுக்கு வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். தற்போது வணிகங்கள் அனைத்தும் இதை மிகவும் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய தொடங்கியுள்ளது.

இந்த விசாரணையில் இன்னும் பல சர்ச்சையான பல விஷங்கள் வெளி வரும் என்று எதிர் பார்க்க படுகிறது.