Breaking News

முதியவர்களுக்கான பராமரிப்புத் திட்டத்தில் பெரிய மாற்றங்கள் செய்ய அரசு முடிவு !

கொரோனா வைரசுக்கு எதிரான மத்திய அரசின் செயல்களைக் கடுமையாக விமர்சித்த அறிக்கையைத் தொடர்ந்து, முதியவர்களுக்கான பராமரிப்புத் திட்டத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதாக மூத்த அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.

நோய் தொற்று காலங்களில் சுகாதர நிலையங்கள் மோசமான சூழ் நிலையில் இருப்பதை சரிசெய்ய, ஆறு அவசர நடவடிக்கைகளை முதியோருக்கான Royal commission பரிந்துரைத்துள்ளது.மேலும் அதிக பணியாளர்களை நியமித்து பாதிப்படந்தவர்களை அவர்களது குடும்பமும் நண்பர்களும் சந்திக்க அரசு உதவ வேண்டும்.நோய் தொற்றை கட்டுபடுத்தும் நிபுணர் ஒருவர் சுகாதார இல்லங்களில் பணியமர்த்தப்பட வேண்டும்.இதுவரை 660 முதியவர்கள் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Common wealth-ன் தோல்விக்களுக்கு நிதியமைச்சர் Mathias Cormann வருத்தம் தெரிவித்துள்ளார். இதைவிட சிறப்பாக பணிபுரிந்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Royal commission-ன் ஆறு பரிந்துரைகளையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் நிறைய திட்டங்களும் பணிகளும் செய்ய வேண்டியுள்ளது. முதிவர்கள் பராமரிப்பில் பெரிய மாற்றங்களை அரசு அதன் அடுத்த பட்ஜெட்டில் கொண்டுவர உள்ளது என முன்னால் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஆரம்பித்த பிறகு முதியோருக்கான பராமரிப்பு திட்டத்திற்காக மேலும் 1.6 பில்லியன் டாலர்கள் Common wealth வழங்கியுள்ளதாக Mr Dutton தெரிவித்தார்.

இத்திட்டத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டு சேவை செய்பவர்களை மட்டும் பணியமர்த்த வேண்டும். மோசமான தோல்விகள் நேர்ந்தால் அதற்கு Common wealth முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று Richard Marles தெரிவித்தார்.Common wealth அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார் .