Breaking News

முதல் “தனிமைப்படுத்தபடாத” விமானம் சிட்னியை வந்தடைந்தது ! காதலியை கட்டி அரவணைத்த காதலர்கள் !

வெள்ளியன்று சிட்னி விமான நிலையத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் பல அரங்கேறின. கோவிட் நோயாளிகளின் சதவீதம் குறைந்துள்ளதால் நூற்றுக்கணக்கான நியூசிலாந்து விமானப் பயணிகள் வரத் தொடங்கினார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட விமானங்களில் பயணித்தவர்கள் சிட்னியில் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இது பரஸ்பரமாக இல்லை. நியூசிலாந்துக்கு வரும் பயணிகளுக்கு 2 வார தனிமைப்படுத்துதல் கட்டாயம்.

Air Newzealand-ல் வெள்ளிக்கிழமை பயணிப்பவர்களில் 90 சதவீதம் ஒரு வழிப் பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிட்னியில் காத்திருந்த மக்களில் தன் காதலிக்காக காத்திருந்த Jayden Guest-ம் ஒருவர். மார்ச் மாதம் சென்ற காதலி இப்பொழுதுதான் திரும்புகிறார்.Mr Guest queensland-ல் இருக்க, அவர் காதலி தன் வேலையை இழந்ததால் நியூசிலாந்திற்கு தன் தந்தையை பார்க்கச் சென்றிருந்தார். பிறகு இந்த ஊரடங்கால் அவர் மீண்டும் இங்கு வர முடியாமல் போனது.என்ன நடக்கும் என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்ததாக திரு Guest-ன் காதலி Taren Kowalski உருக்கமாக தெரிவித்தார்.

மற்றொரு நபர் Adam Dowsing தன் காதலியை சந்திக்க ஆவலாக உள்ளதாகத் தெரிவித்தார்.இத்துடன் ஐந்து மாதங்கள் தன் காதலியை பிரிந்து தவித்ததாக அவர் உணர்ச்சி போங்க கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தன் கட்டுப்பாடுகளை விரைவில் அகற்ற வேண்டும் என NSW Premier Gladys Berjiklian கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒரு சமூகப் பரவல் மட்டுமே பதிவாகியுள்ளது.வரும் வாரங்களில் இந்த அளவு குறைந்தால் தளர்வுகளை மேலும் விரிவுபடுத்தலாம் என Ms Berejiklian தெரிவித்தார்.

ஐரோப்பா மற்றும் வடஅமேரிக்காவை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அலையின் பாதிப்பு குறைவே.
கடந்த 24 மணி நேரத்தில் விக்டோரியவில் கோவிட் தொற்று எண்ணிக்கை இரண்டு. Premier Daniel Andrews ஞாயிறு அன்று தளர்வுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்தில் இருந்து “No quarantine” விமானங்களில் வருபவர்கள் தனிமைப்படுத்துதல் இன்றி NSW, Australian Capital Territory மற்றும் வடக்கு மாகாணத்திற்கு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.Western Australia, Queensland மற்றும் Tasmania மாநிலங்கள் தங்கள் எல்லையை மூடிவிட்டனர், தனிமைப்படுத்துதலுடன் ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். விக்டோரியர்களுக்கு பயணம் செய்ய கடும் கட்டுப்பாடு நிலவுகிறது.