கடந்த 30ஆண்டுகளில் முதல்முறையாக உண்டான பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு வந்துள்ளதாக புதிய புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளார் Treasurer Josh Frydenberg . 1976-க்கு பின் கால் நூற்றாண்டில் GDP -ல் உண்டான மிகப்பெரிய முன்னேற்றம் இதுவாகும்.
GDP வளர்ச்சி 3.3% ஆக உள்ளன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.கொரோனா சமூக பரவல் உண்டாக்கிய மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வருகிறது. மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது பொருளாதார ரீதியாகவும், சுகாதார முன்னேற்றத்திலும் ஆஸ்திரேலியா நன்கு செயல்படுகிறது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் Josh Frydenberg தெரிவித்தார்.
பொருளாதார வல்லுனர்களின் கணிப்பின்படி பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதம் அதிகமாகும். ஆனால் அதைவிட பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வந்து இருந்தாலும் நாட்டின் பொருளாதார மீட்பு இன்னும் முடியவில்லை என்று அவர் வேதனையை வெளிப்படுத்தினார்.
தொழில்நுட்ப ரீதியாக பொருளாதார மீட்பு ஏற்பட்டிருந்தாலும் முழுமையான பொருளாதார மீட்பு ஏற்படவில்லை என்றும், இன்னும் அதை சரி செய்ய பல மைல் தூரம் செல்ல வேண்டி உள்ளது என்றும் மற்றும் ஆஸ்திரேலிய குடும்பம் மற்றும் வர்த்தகம் மிகவும் போராடிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட கொரோனா தாக்கத்தினால் Victoria மாகாணம் மட்டும் பொருளாதார வளர்ச்சியில் சற்று பின் தங்கியிருந்தது. தற்போது மீண்டும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி அது மீள தொடங்கி உள்ளது .நாட்டின் ஒவ்வொரு மாகாணமும், விக்டோரியா மாகாணத்தை தவிர மிக பலமான வளர்ச்சியை கண்டுள்ளன. விக்டோரியா மாகாணமும் மற்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து வளர்ச்சியில் ஈடுபட்டிருந்தால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருந்திருக்கும்.
பல மாகாணங்கள் மற்றும் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட தளர்வுகளின் மூலம் வீட்டு செலவுகளினால் பொருளாதார வளர்ச்சியில் 4 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து Shadow Treasurer Jim Chalmers கூறுகையில், புதிய கால் ஆண்டுக்கான GDP புள்ளி விவரங்கள் ஒரு அரிதான செய்தியாகும். இருந்தாலும் நாட்டு மக்கள் இன்னும் கடினமான சூழ்நிலையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
பொருளாதார மந்த நிலையினால் மக்களுக்கு ஏற்பட்ட பின்விளைவுகளும் மற்றும் பொருளாதார மீட்பும் மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.பல லட்சக்கணக்கான வேலை இல்லாதவர்களுக்கு இந்த GDP புள்ளி விவரங்கள் சிறிது ஆறுதலாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.