Breaking News

புலம் பெயர்ந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு பக்கவாதம் பற்றிய ஆபத்தை அறியாதவர்கள் !

ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள் பேசும் பெரும்பான்மையானவருக்கு மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு பக்கவாதம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை.

அவ்வாறு பக்கவாதம் ஏற்படும் பொழுது சிகிச்சைக்கு முன் 1.9 மில்லியன் மூளை செல்ஸ் நிமிடத்திற்கு இறக்கிறது. இந்நிலையில் அனைவருக்கும் பரிச்சயமான Bill Gasiamis தனது 40வது வயதை எட்டுவதற்கு முன்பாகவே மிகக்கொடூரமான பக்க விளைவுகளைக் கொண்ட பக்கவாதத்தை சந்தித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இவருக்கு இப்பொழுது 46 வயது ஆகின்ற நிலையில் வெற்றிகரமாக பக்க வாதத்தில் இருந்து மீண்டு தனது பெயிண்டிங் தொழிலை நல்ல முறையில் நடத்தி வருகிறார்.

தனக்கு பக்கவாதம் ஏற்பட்டதைப் பற்றி கூறிய Mr.Gasiamis, ஒருநாள் தூக்கத்திலிருந்து விழித்தபோது திடீரென கால் விரல்கள் மறுத்து போயின, இதைத் தொடர்ந்து அடுத்த வாரமே எனது இடது பக்கம் முழுவதும் அது பரவி முற்றிலுமாக செயல் இழந்து விட்டது. அதன்பின் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை, மேலும் இதற்கு முன் இதுபோல எனக்கு நிகழ்ந்ததே இல்லை.

பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லக்கூடிய ரத்தத்தின் ஓட்டத்தை தடுத்து நிறுத்துவதோடு அது மூளை செல்களை இழக்க வைத்து ஆக்சிஜன் மற்றும் நியூட்ரிசன் குறைவை ஏற்படுத்துகிறது. அவ்வாறு பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பாகவே மூன்று விதமான அறிகுறிகள் தென்படும்.

முகத்தில் வாய்ப்பகுதி இயல்பான நிலையில் இல்லாமல் தாழ்வுடன் காணப்படுவது. கைகள் ஒரு பக்கமாக இழுத்தபடி காணப்படுவது. மற்றும் பேசும்பொழுது வார்த்தை உச்சரிப்பு இயல்பான வகையில் இல்லாமல் குழறும் பேச்சுடன் பேசுவது உள்ளிட்டவைகள் மிக முக்கியமான அறிகுறிகளாக தீவிர பக்கவாத நோய்க்கு சொல்லப்படுகிறது.

ஆனால் Stroke Foundation Survey அளித்த அறிக்கையின்படி ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளைப் பேசும் மூன்றில் ஒருவருக்கு இது மாதிரியான அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. ஒருவேளை இது போன்ற அறிகுறிகள் தெரியுமாயின் உடனடியாக மருத்துவமனையை அணுகி பக்கவாதத்திற்கு உடனடியான சிகிச்சை பெறுவதன் மூலம் அதனை மிக விரைவாக குணமாக்கி விடலாம்.

அவ்வாறு பக்கவாதம் ஏற்படும் போது அதில் நேரடியாக மூளையை தாக்குவதால் மூளையில் உள்ள செல்கள் கிட்டத்தட்ட 1.9 மில்லியன் வரை ஒரு நிமிடத்திற்கு இழக்கிறது. மேலும் இதை சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும்.

எனது அம்மா மற்றும் அப்பா ஆங்கிலம் மட்டும் அல்லாமல் கிரீக் மொழியிலும் பேசுவதால் மிக எளிமையாக அவர்கள் சொல்வதை புரிந்துகொள்ள ஏதுவாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார் .