புதிய கார்பன் வெளியீடு புள்ளி விவரங்களை பற்றி அந்தத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் பெருமை கொள்ளும் வேளையில், Morrison அரசின் மீது உலக அளவிலான ஒரு மிகப்பெரிய அழுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் கார்பன் வெளியீடு குறைந்து வருகிறது என்பதை கண்காணிப்பதற்காக, பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
2030-ம் ஆண்டுக்குள் 22 சதவீதம் கார்பன் வெளியீடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் Australia’s Paris agreement இலக்கின் படி இது 26 முதல் 28 சதவீதம் குறைவு என்று தெரிகிறது.
Energy Minister Angus Taylor’s technology road map-ல் குறிப்பிடப்பட்ட குறைவான கார்பன் வெளியீடு தொழில்நுட்பம், பயன்பாட்டிற்கு வந்தால் , இந்த இலக்கை அடையலாம் என்று தெரிகிறது..
2005 ஆம் ஆண்டின் படி ஆஸ்திரேலியாவில் தற்போதைய கார்பன் வெளியீட்டின் அளவு 16.6% அதிகமாக இருக்கின்றது. வேறு எந்த நாடும் பயன்படுத்தாத கணக்கீட்டு முறையை இந்த Paris agreement-ல் உள்ள இலக்கினை அடைவதற்காக, இந்த அரசு பயன்படுத்த, இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டம் வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால் ஆஸ்திரேலியாவின் வளர்ச்சி பற்றி பெருமை பேச தான் இந்த கணக்கீட்டை Angus Taylor பயன்படுத்தி வருகிறார். செயல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் தான் முக்கியம் என்றும் நாம் கடந்து வந்த சாதனைகள் அதை தெரிவிக்கும் என்றும் கடந்த வியாழனன்று அவர் தெரிவித்தார்.
Labor leader Anthony Albanese , இந்த carry-over திட்டம் மிக நகைச்சுவையான ஒன்று என்றும், இந்த அரசாங்கம் கணக்கீட்டு முறையை விட்டு விட்டது என்பதை நான் மறுக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
விமானம் மற்றும் வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது .இது கொரோனா வருவதற்கு முந்தைய காலகட்டத்தை விட குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் ஆன்லைன் வீடியோ மீட்டிங் மூலமாக நடைபெறுவதாலும், மக்கள் தொகை குறைந்து வருவதாலும் போக்குவரத்து குறையும் என்றும் இந்த திட்ட அறிக்கையில் தெரிகிறது .
Gas உற்பத்தி 3 சதவீதம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் புதிய கார் விற்பனையில், 26% மின்சார வாகனங்கள் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்பன் வெளியீடு குறைப்பதற்கான இலக்கினை நிர்ணயிக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் UN அழுத்தத்தை கொடுத்து வருகின்றது.
இந்த கொரோனா சமூக பரவல் கட்டுப்பாட்டினை பயன்படுத்தி, பசுமையை மீண்டும் கொண்டுவர கவனம் செலுத்துமாறு அது கேட்டுக் கொள்கிறது. இந்த நூற்றாண்ட்டில் வெப்பத்தின் அளவானது 3%ற்கு அதிகமாக உயரலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இது பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அதிகமாகும்.
G20 உறுப்பினர் நாடுகளில் இடம்பெற்ற ஆஸ்திரேலியாவின் கால நிலை இலக்கு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான காலநிலை மாநாடுக்கு முன்பு இந்த அறிக்கை வந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
British leader Boris Johnson தலைமை ஏற்க உள்ள 12 டிசம்பர் மாநாட்டில், Prime Minister Scott Morrison பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வலுவான காலநிலை செயல் அர்பணிப்பு உணர்வு உள்ளவருக்கு மட்டும் பேசுவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று அனைத்து தலைவர்கள் ஏற்கனவே கூறியிருந்தது.