Breaking News

பாரிஸ் ஒப்பந்தத்தில் 77 நாட்களில் அமெரிக்கா மீண்டும் சேரும் என்று Joe Biden நம்பிக்கை !

Paris காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவின் Trump நிர்வாகம் முறையாக வெளியேறிய பொழுது, திரு Joe Biden இன்னும் சரியாக 77 நாட்களில் Biden நிர்வாகம் அதில் மீண்டும் இணையும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது.கடந்து ஆண்டு இந்த அறிவிப்பை முறைப்படி ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்டது.12 மாத notice period என்பதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

கால நிலை மாற்றம் குறித்து Biden-ன் நிலை:

கால நிலை மாற்றம் குறித்து Biden-ன் அரசு மிகவும் முற்போக்கான நிலைபாட்டை கொண்டிருக்கும். ஏற்கனவே US $ 2 ட்ரில்லியன் மதிப்பில் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு திட்டம்,Paris ஒப்பந்தத்தில் இணைவதற்கான உறுதி , 2050-ற்குள் net-zero emissions-ஐ நோக்கிய குறிக்கோள் என்று பல திட்டங்களை Mr Biden தெரிவித்துள்ளார்.

மேலும் 2035-ஆம் ஆண்டிற்குள் கார்பன் மாசுகட்டுபாட்டை தவிர்க்கும் மின்சாரத் துறையை அடைவதற்கான திட்டம். மின்சார வாகனங்கள் உற்பத்தியில் முதலிடம் பிடிக்க வேண்டும்,Energy efficiency தரத்தை முன்னேற்ற நான்கு ஆண்டுகளில் நான்கு மில்லியன் கட்டிடங்களையும் இரண்டு மில்லியன் வீடுகளையும் மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளார்.

தற்போதைய தேவை மின்துறை போக்குவரத்து துறை மற்றும் உற்பத்தித் துறை முன்னேறுவதற்கான தொலைநோக்கு பார்வை அரசாங்க முதலீட்டின் ஆதரவோடு செய்யப்படவேண்டும். Mr Biden இதைச் செய்வதாக உறுதியளித்தார்.

அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் செனட் இல்லாமல் அதைச் செய்ய முடியும்.

உதாரணத்திற்கு கார்களின் எரிபொருள் சிக்கனத்தின் தரத்தை நிர்ணயிப்பதும், 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அமெரிக்க பேருந்துகளும் zero emissions நோக்கி இருக்க வேண்டும் என்பதையும், அரை மில்லியன் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களில் உருவாக்க பொதுப்பணத்தை பயன்படுத்துவதும் போன்ற திட்டங்களுக்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவையில்லை.

திரு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பின் California 2035-க்குள் அனைத்து புதிய கார்களும் zero emissions-ஐ நோக்கி சுலபமாகச் செல்ல முடியும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தை ட்ரம்ப் அரசாங்கம் கையாளத் தவறியது ஆஸ்திரேலிய அரசிற்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

காலநிலைப் பற்றி 2014 ஆம் ஆண்டு Queensland-ல் ஒபாமா கண்டிப்புடன் தெரிவித்ததை போல் அல்லாமல் காலநிலை அறியவியலையும் மருத்துவத்தையும் ட்ரம்ப் அவர்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வந்துள்ளார்.இதற்கு ஆதரவாக Prime Minister Scott Morrison இருந்து வந்ததால் தொடர்ந்து மக்கள் பலியாகி வந்துள்ளனர்.

Mr Biden-ன் கால நிலை மாற்றம் பற்றிய குறிக்கோளினால் ஒவ்வொரு சர்வதேச பேச்சுவார்தைகளிலும் கால நிலை மாற்றம் முக்கியமான இடத்தை பிடிக்கும்.

இதனால் ஆஸ்திரேலியா பாரிஸ் ஒப்பந்தத்தில் தனது குறிக்கோள்களை அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை எதிர்பார்க்கும். இதில் முக்கியமான குறிக்கோளாக zero emissions இடம்பெறும்.

இதில் சிறப்பம்சமாக Mr Biden அவர்களின் வர்த்தகத் திட்டம் கார்பன் மாசுப்பாட்டை உருவாக்கும் இறக்குமதியின் மீதான கட்டணங்களை ஆதரிக்கிறது. சீனா ஜப்பானுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக நண்பராக உள்ளது. சீனா மற்றும் ஜப்பான் ஏற்கனவே zero emissions இலக்கை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.