Breaking News

பழங்குடியினரின் கொடியின் பதிப்புரிமையை common Wealth பெறக்கூடாது. Senate அறிக்கை!

பழங்குடியினரின் கொடியின் பதிப்புரிமையை Common Wealth பெறக்கூடாது என Senate குழு பரிந்துரைத்துள்ளது.அதற்கு பதிலாக தற்போதைய பதிப்புரிமையாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தைகளின்படி கொடியின் மாதிரியை பயன்படுத்துவதற்கு தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த இரண்டு பரிந்துரைகளும் செவ்வாய் அன்று கிடைத்த 74 submissions-களுக்குப் பிறகு இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டது.
Luritja Man மற்றும் பதிப்புரிமையாளர் Harold Thomas-ம் 1971 ஆம் ஆண்டு இக்கொடியை வடிவமைத்தனர். பிறகு 2018 ஆம் ஆண்டு தேசிய நிறுவனமான WAM ஆடை நிறுவனத்துடன் வணிக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஒப்பந்தம் செய்ய முடியாவிட்டால் common wealth கண்டிப்பாக உரிமத்தை வாங்க வேண்டும் என Labor தெரிவித்தது.கொடியின் உரிமையை கட்டாயமாகப் பெறுவது வெறுக்கத்தக்க செயல் என்றும், இது ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கும் எனவும் Liberal Senator Andrew Bragg தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியர்கள் கொடியை சுதந்திரமாக பறக்க விடலாம். வேறு வழியில் பயன்படுத்துவது வரம்பை மீறும் செயலாகும்.பழங்குடியினர் கொடியை தங்களது பங்குகளில் WAM clothing பயன்படுத்தியதால் பழங்குடியினர் நடத்தும் Clothing The Gap சமூக நிறுவனம் கடந்த ஆண்டு #Freetheflag பிரச்சாராத்தை தொடங்கியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் AFL நிறுவனம் கொடியை பயன்படுத்த முடியாமல் போனதால் இந்த பிரச்சனை மீண்டும் உருவாகியுள்ளது.இதன் மூலன் #Freetheflag என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி கொண்டு இருக்கின்றது.