Breaking News

பள்ளியின் தொற்றுக்கு மொழிப்பெயர்ப்பாளர் பற்றாகுறை காரணம் கிடையாது – Daniel Andrews

வடகிழக்கு Melbourne-னில் உள்ள இரண்டு பள்ளிகளில் மேலும் தொற்றுகள் கண்டறியப்பட்டதால் அனைத்து பள்ளி மாணவர்களும் பள்ளியில் பணிபுரிவோரையும் கோவிட் பரிசோதனை உடனடியாக செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் சனிக்கிழமை அன்று 7 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளது.அதில் 4 நபர்கள் Preston புறநகரில் பதிவாகியுள்ளது அதில் ஒன்று Preston இஸ்லாமியப் பள்ளி மாணவன்.

இதனால் அனைத்து மாணவர்களையும், பணியாளர்களையும் அறிகுறிகள் இல்லையென்றாலும் கட்டாய பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இரண்டு பள்ளிகளும் அடுத்த பதினைந்து நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Premier Daniel Andrews இன்று பல சமூக மற்றும் ஆன்மீகத் தலைவர்களை சந்தித்து அவர்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை பரிசோதனை செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவரவர் பின்னணியை பொருட்படுத்தாமல் அனைவரும் இதில் ஒன்றிணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வைரஸ் பாரபட்சம் இன்றி அனைவரையும் தாக்கக்கூடியது என்றும் அனைவரும் கட்டாய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.மேலும் East Preston Islamic college முதல்வரை Mr Andrews சந்தித்தார்.

ஆங்கில அறிவு இல்லாததும், மொழிபெயர்பாளர் பற்றாகுறையும் தான் இந்த பரவலுக்கு காரணம் என்று சொல்வதை Andrews அடியோடு மறுத்தார்.

East Presto Islamic College உடன் தொடர்புடையவர்கள் மொத்தம் 101 பேர். Croxton Special School உடன் தொடர்புடையவர்கள் 34 பேர் என்று விக்டோரியாவின் Testing Commander Jeroen Weimar தெரிவித்தார்.

தற்போது நிலுவையில் உள்ள சோதனைகளின் முடிவுகள், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த நாளைய அறிக்கையை பாதிக்கும் என ஆன்ட்ருஸ் கூறினார்.இந்த தொற்றுகளின் மூலமும் தொடர்புகளையும் கண்டுபிடிக்க முயற்சிப்பது தான் இப்பொழுது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

சனிக்கிழமை கிடைத்த புள்ளி விவரங்கள் படி கடந்த இரண்டு வாரங்களில் புதன் கிழமை வரை 10 தொற்றுகள் உறுதியாகியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் தொற்று சராசரி Melbourne-னில் 5, பிராந்திய விக்டோரியாவில் 0.5 ஆக உள்ளது.

பள்ளியில் ஏற்பட்ட தொற்றால் Melbourne-னில் வடக்கு புறநகரங்களில் 800 குடியிருப்பாளர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.சனிக்கிழமையன்று மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 817 ஆகவும், தேசிய அளவு 905 ஆகும். கடந்த வாரத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

Anti-Lockdown போராளிகள் 16 பேர் வெள்ளியன்று 96 அபராதம் விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.போராளிகள் மாநிலத்தின் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர அழைப்பு விடுத்தனர்.

முககவசம் அணிய தவறியது, பொதுக்கூட்ட வழிமுறைகளை மீறியது, காவலர்களை தாக்கியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.