Breaking News

பல்கலைக்கழக நிதி உதவித் திட்டம்-மத்திய கூட்டணி ஆதரவு !

பல்கலைகழகங்களுக்கு நிதி உதவி செய்யும் திட்டத்திற்கு மத்தியக் கூட்டணி senator Stirling Griff ஆதரவு தெரிவித்துள்ளார்.இதனால் மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

இந்த உயர் கல்வி ரசீது , வாய்ப்பு இழந்த மாண்வர்களுக்கும் பிராந்திய மாணவர்களுக்கும் நிதி உதவி அளிக்கும் என்பதால் இத்திட்டத்தை ஆதரிப்பதாக MP Rebecca Sharkie தெரிவித்துள்ளார்.மேலும் இது மாணவர்களை மேலும் கற்பதற்கு ஊக்கம் அளிக்கும் என அவர் தெரிவித்தார்.

“Job-Ready Graduates” சட்டம் ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு பல்கலைகழகங்களில் இடம் கிடைக்க உதவி செய்யும் என கல்வி அமைச்சர் Den Tehan தெரிவித்தார்.ஆனால் Tasamanian senator Jacqui lambi, தெற்கு ஆஸ்திரேலிய senator Sarah Hanson Young மற்றும் Rex Patrick இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் தெற்கு ஆஸ்திரேலிய இளைஞர்களின் ஆராய்ச்சி திறன் மற்றும் வேலை உருவாக்குவதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர்களது தெரிவித்தனர்.மாணவர்களின் HECS-HELP கட்டணங்களை 9 சதவீதம் உயர்த்தி, பல்கலைகழகத்தின் நிதி உதவியை 15 சதவீதம் குறைக்கும் என Adelaide பல்கலைக்கழகம் விவாதித்துள்ளது.

சட்டமன்றம் கொடுமையாக நடந்து கொள்வதாகவும் மாணவர்கள பட்டம் பெற்று வரும்பொழுது கடனாளியாக வருவார்கள் எனவும் Tanya Plibersek தெரிவித்துள்ளார்.மைய கூட்டணி மற்றும் ஒரு நாடு அரசுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து மாணவர்களுக்கு பெரும் பணச் செலவை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.