2015 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் முடிந்து 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், வரும் டிசம்பர் 12ஆம் தேதி British Prime Minister Boris Johnson தலைமையில் பருவநிலை இலக்கு நிர்ணய உச்சிமாநாடு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட இருக்கிறது. இந்த மாநாட்டில் அனைத்து உலகத் தலைவர்களும் தங்களுடைய பருவ நிலை இலக்கினை நிர்ணயம் செய்ய பேச அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்த அனுமதி பெற தவறிவிட்டார் என Prime Minister Scott Morrison மீது விமர்சனம் எழுந்துள்ளன. ஆனால் இந்த விமர்சனத்திற்கு அவர் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவின் கார்பன் வெளியீடு குறைப்பு திட்டத்தில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு இருக்குமென, கடந்த வார தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் MR.MORRISON தெரிவித்திருந்தார். அவர் மீது உள்ள விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில், அவர் கூறியது என்னவென்றால் New Zealand உட்பட பல நாடுகளும் இந்த மாநாட்டில் பேசவில்லை என்பதாகும்.
ஆஸ்திரேலியாவின் கார்பன் வெளியீட்டுக் கொள்கை ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்காக உருவாக்கப்படுகிறது. மக்களின் கோரிக்கைகள், தேவைகள், கருத்துக்கள் மற்றும் விஞ்ஞானத்தின் அறிவுரைகளுக்கு ஏற்றதாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார் .
மாநாட்டிற்கு முன்பாக, Paris ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் கார்பன் வெளியீடு இலக்கினை அடைய தனது திட்டத்தை தொடங்கினார். 2030 ஆம் ஆண்டுக்குள் தனது இலக்கினை அடைய சரியான பாதையில் ஆஸ்திரேலியா சென்று கொண்டிருக்கின்றது எனவும், புதுப்பிக்கப்பட்ட தேசிய greenhouse gas வெளியீடு திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் federal அரசு தெரிவிக்கிறது .
பழைய கால நிலை ஒப்பந்தத்தில் உள்ள புள்ளி விவரங்களை பயன்படுத்தும் முறை சர்வதேச அளவில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. ஆதலால், ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் Pacific Islands Forum கூட்டத்தில் ,இந்த அரசின் பருவநிலை கொள்கையினை குறியீட்டு காட்ட Mr Morrison திட்டமிட்டுள்ளார்.
அதிக பொறுப்புணர்வு உள்ள நாடுகளுக்கான UN பருவநிலை உச்சி மாநாடு
இந்த உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்த அனுமதிக்கப்படாத ஏறக்குறைய 80 உலகத் தலைவர்களில் , New Zealand prime minister Jacinda Ardern ஒருவராவார். உலக அளவில் மிக அதிக அளவில் கார்பன் வெளியீடு செய்யும் சீனாவுக்கு இதில் பேச அனுமதி அளிக்கப்பட்டது தான் மிக ஆச்சர்யமான ஒன்றாகும்.
மிக அதிக பொறுப்புணர்வு உள்ள நாடுகளுக்கு உரை நிகழ்த்த வாய்ப்பு வழங்கப்படும் என்ற வழிகாட்டுதலை அனைத்து உறுப்பினர்களுக்கும் தெள்ளத்தெளிவாக, இந்த உச்சி மாநாட்டை நடத்தும் UN, UK மற்றும் FRANCE அளித்திருந்தது. ஆதலால் தனி ஒரு நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ளாததை பற்றி எந்த கருத்தும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீடு அளவினை 26 முதல் 28 சதவீதமாக குறைப்பதே ஆஸ்திரேலியாவின் தற்போதைய இலக்காக இருக்கிறது. 2050க்குள் பூஜ்ஜிய கார்பன் வெளியீட்டை அடைவதற்கான கொள்கையை ஏற்றுக் கொள்வதென்பதை மறுப்பதாகவும் Mr Morrison தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பேசும் நாடுகளின் கருத்துகளைக் கொண்டாட வேண்டுமே தவிர பேசாத நாடுகளின் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்று Mr Hart தெரிவித்துள்ளார். கொரோனா சமூகப்பரவலால் ஏற்படும் பிரச்சனைகளையும், தாண்டி பல வளரும் நாடுகள் பருவ காலநிலை சிக்கல்களை மிக அழகாக கையாண்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் மத்தியில் பூஜ்ஜிய கார்பன் வெளியீடு அளவினை அடைய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கார்பன் வெளியீட்டு அளவை குறைப்பதில் ஆஸ்திரேலியா போதுமான அளவில் முயற்சி எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த உச்சி மாநாட்டில் பேச அனுமதி வழங்கப்படாத தைப்பற்றி, முன்னாள் Prime Minister Kevin Rudd விமர்சனம் செய்துள்ளார். பருவகாலநிலை மாற்றம் நடவடிக்கையில் மிக மோசமாக இந்த அரசு செயல்படுகிறது என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டு மக்களுக்கு Mr Morrison நேர்மையாக இருக்க வேண்டும் என்றும், அவருடைய கொள்கைகள் நாட்டு மக்களிடையே எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். உச்சி மாநாட்டில் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு, ஆஸ்திரேலியா பருவகாலநிலை மாற்றம் தொடர்பான செயல்களில் சரியான நடவடிக்கை எடுக்காததுதான் காரணம் என்று Greens Leader Adam Bandt தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டிற்கான இலக்கு மிகவும் பலவீனமாக இருந்ததினால் தான், Scott Morrison-க்கு உரை நிகழ்த்த வாய்ப்பு அளிக்கப்பட வில்லை என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.