Breaking News

பதட்டமான சூழ்நிலையில் St Kilda beach ல் மக்கள் பெருந்திரளாக கூடியதை Daniel Andrews கடுமையாகக் எச்சரித்துள்ளார்!

ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரானா தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் விக்டோரியாவில் இன்னும் கொரானா தொற்று பரவல் முடிந்தபாடில்லை.

அதற்குள்ளாகவே விக்டோரியா மக்கள் பெருந்திரளாக St Kilda beach- ல் கூடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நாஸ்தி பண்ணிக்கொண்டு இருந்ததை கேள்விப்பட்ட Daniel Andrews அங்கிருந்து உடனடியாக மக்களை அப்புறப்படுத்தும் படி உத்தரவிட்டதோடு கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது உள்ள நிலவரப்படி கொரானா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆகவும், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 3 பேர் இறந்தும் உள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு St Kilda beach ல் பெருமளவு மக்கள் கூடி, சமூக இடைவெளி, முக கவசம் என எந்த ஒரு அடிப்படை கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் கண்டமேனிக்கு சுற்றி திரிந்தவர்களை காட்சிப்படுத்த வந்த பத்திரிகையாளர்களையும் அங்கு இருந்த ஒரு சிலர் முத்தமிட்டதோடு பல்வேறு அநாகரீக செயல்களில் ஈடுபட்டுள்ளது பலரையும் பெரும் அதிருப்தி ஆக்கிள்ளது.

இதைப்பற்றி பேசிய Daniel Andrews, கடற்கரையில் எந்த ஒரு அனுமதியும் இன்றி திடீரென கூடி பல்வேறு அநாகரீக செயல்களில் ஈடுபட்ட மக்களை கண்டு அதிருப்தி அடைந்ததோடு அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விக்டோரியா மக்களிடம் பேசிய Daniel Andrews இன்று முதல் வரும் அக்டோபர் 19 வரை அரசின் கட்டுப்பாடுகளை மதித்து அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் மிக விரைவிலேயே ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும், இல்லை என்றால் இத்தனை மாதங்களாக நாம் அனைவரும் போராடியது வீணாகிவிடும்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் கடந்த 14 நாட்களாக இன்றுவரை சுமார் 12 கொரானா நோயாளிகள் உள்ளதாகவும் அதில் 11 பேர் எந்த ஒரு அறிகுறியும் கடந்த புதன்கிழமை வரை இல்லாமல் இருந்துள்ளனர். மெல்போர்னில் இந்த அளவிற்கு கொரானா மிக தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டதற்கு காரணம் அனைவரின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பும் இன்று முழு பலனாக தெரிகிறது என professor Sutton சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

எனினும் இன்றுவரை மெல்போர்னில் சராசரி கொரானா தொற்று வீதமாக 5 பேராக இருக்கும் நிலையில் அதைவிட இனி வரும் நாட்களில் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்கான முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெல்போர்ன் அரசு விதிக்கிறது.

விக்டோரியா மக்கள் தாங்கள் தங்கும் இடத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என Attorney General Jill Hennessy அறிவுரைக் கூறியுள்ளார்.

இப்பொழுதுவரை 107 பேர் ஹோட்டளில் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர் அதில் 55 பேர் Frontline Workers ஆவர்.

மெல்போர்னுக்கு செல்லக்கூடிய விமானப் போக்குவரத்து வரும் நவம்பர் 6 வரை இயக்கப்படும் என்பது எதிர்பார்க்க முடியாது.