Breaking News

நீரில் மூழ்கி இறக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது !

சிட்னியில் அருவிக்குள் குதித்து நீந்த முயன்ற மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.Wattamolla அருவிக்குள் பாறையில் இருந்து குதித்து நீந்த முயன்ற 23 வயது மாணவன் நீருக்கு அடியில் சிக்கி இறந்த நிலையில் ஏழு அடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சிட்னியின் தெற்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று மாலை ஐந்து மணி அளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.மேலும் இந்த ஏரியில் நீச்சலுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாகும்.அதற்கான அறிவிப்பு பலகையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அங்கு சுற்றி வேலியும் அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த நேபாள மாணவன் தனது தோழியுடன் வேலியை தாண்டி குதித்து குளிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு நீச்சல் தெரியாது என்றும் சிலர் கூறுகின்றனர். அவர் நீருக்குள் குதித்த பிறகு அவர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் அதை பார்த்த பலரும் அவசர சேவைப் பிரிவுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியினர் சுமார் 20 நிமிடங்கள் போராடி அந்த மாணவனை சடலமாக மீட்டனர்.அவரிடம் வந்த தோழிக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.ஆபத்தான பகுதியாக கருதப்படும் இந்த இடத்தில் இதுவரை ஐந்து ஆண்டுகளில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த சம்பவத்தை பார்த்த பலரும் ஆபத்தான இந்த இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்றும்,விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர் .