Breaking News

நியூ சவுத் வேல்ஸில் சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது !

நியூ சவுத் வேல்ஸில் மத்திய மற்றும் தெற்கு டேபிள்லேண்ட்ஸைச்சுற்றி இந்த வார இறுதியில் 40 செ.மீ அளவு பனிபொழிய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குளிர்காலம் துவக்கத்திலேயே NSWவில் சில பகுதிகளில் பலத்த காற்றும் பணியும் வீசத் தொடங்கியுள்ளது.

சிட்னியில் தென்மேற்கு பகுதியில் உள்ள Camdenஇல் வெள்ளிக்கிழமை இரவு 115 கிமீ / மணி வரை வேகமாக காற்று வீசியது .அதே நேரத்தில், நகரத்தில் மற்ற சில இடங்களில் 106 கிமீ / மணி வேகத்தில் காற்று வீசியது.

Illawarra தெற்கு மற்றும் மத்திய டேபிள்லேண்ட்ஸின் சில பகுதிகளிலும் 90 கிமீ / மணி வேகத்திற்கு காற்று வீசுவதால், சனிக்கிழமையன்று வானிலை மோசமாகவும், கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Orange, Oberon,Barrington Tops, போன்ற இடங்களை சுற்றி கடுமையான பனி பொழிந்து உள்ளது.alpine regionஇல் ஒரே நாள் இரவில் சுமார் 20 செ.மீ பனி பொழிவு ஏற்பட்டு உள்ளது.இந்த வார இறுதியில் 40 செ.மீ பனி பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் NSW-ACT manager Agata Imielska கூறுகையில்,எதிர்பார்க்கப்பட்ட வானிலையை விட 10 டிகிரி வரை குளிராக இருக்கும் என்று கூறியுள்ளார். வானிலை மோசமாக இருப்பதனால் பல பகுதிகளில் வாகனம் ஓட்டுவதும் ஆபத்து என்று அவர் எச்சரித்துள்ளார். வெளியே செல்லும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குளிரான இந்த காலநிலை விரைவில் முடிவடையும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சற்று வெப்ப நிலைகள் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.சிட்னி மற்றும் தெற்கு NSWவில் குளிர்ந்த வானிலை இருந்தபோதிலும், மாநிலத்தின் வடக்கு மற்றும் தூர வடக்கு கடற்கரையில் சனிக்கிழமை அன்று தீ விபத்தையும் சந்தித்து வருகின்றது.

மேற்கு சிட்னியில், Hoxton Park, அருகே பலத்த காற்று வீசியதால் KFC அருகே இருக்கக்கூடிய நடை பாதையிலும், தெருவிலும் விபத்து ஏற்பட்டுள்ளது., அதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சிட்னியின் தென்மேற்கு பகுதியான Bardiaவில் ஒரு காரின் மீது மரம் விழுந்ததில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.இதனால்
மக்கள் அனைவரையும் பாதுகாப்புடன் இருக்கவும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தி உள்ளது