Breaking News

நியூசிலாந்து அரசு, கோடை பண்டிகை நாட்களுக்கு முன்பாக போதைப்பொருள் பரிசோதனையை சட்டமாக்க திட்டமிட்டுள்ளது !

கோடை பண்டிகை நாட்களுக்கு முன்பாக போதைப்பொருள் பரிசோதனையை சட்டமாக்க இருக்கின்றது Newzealand அரசு .ஆனாலும் அடுத்த வருடம் முழுமையான கலந்துரையாடலுக்கு பின்பு நிலையான அமைப்பு வெளியிடப்படும் என்பதை அறிவித்துள்ளது.

இது குறித்து ,Health Minister Andrew Little கூறியதாவது , இந்த அரசு போதைப்பொருள் பரிசோதனை செய்வதற்கான சட்டங்களை இயற்றும். நியூஸிலாந்து இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்துவது மன்னிக்க கூடிய விஷயம் இல்லை. அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்பதே எங்களுடைய விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த போதை பொருள் பரிசோதனை சட்டமாக்கப்பட்டால் ,கண்டிப்பாக இதனால் ஏற்படக்கூடிய தீங்கு குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். போதை பொருள் பயன்படுத்துவதை ஒரு ஆரோக்கிய நல்வாழ்வுக்கான பிரச்சனையாகவும், இதனை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீங்குகளை குறைப்பதற்காகவும் இந்த அரசு முனைப்போடு உள்ளது.

Newzealand இளைஞர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவதற்காக நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. இதற்கு முன்னால் போதைபொருள் பரிசோதனை நியூசிலாந்து திருவிழாக்களில் சில காலங்கள் நடந்துள்ளன. ஆனால் எந்தவித சட்ட வரைமுறை கட்டமைப்பு இல்லாமல் நடந்துள்ளன.

டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறக்கூடிய பாராளுமன்ற கூட்டத்தில் இந்த மசோதாவை Mr.Little பேசுவார் . அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாவுக்கு left-wingers the Greens மற்றும் right-wingers ACT ஆதரவும் உள்ளது. இந்த மசோதா இந்த கோடை காலத்திற்காக சில காலவரை முறையைக் கொண்டுள்ளது. ஆனாலும் MR.Little கூறியது என்னவென்றால் அடுத்த வருடம் முழுமையான கலந்துரையாடலுக்கு பின்பே ஒரு முழுமையான ஒழுங்குமுறை வெளியிடப்படும் என்பதை அறிவித்தார்.