Breaking News

நியுசிலாந்து ,சில ஆஸ்திரேலிய மாநிலங்கள் இடையே QUARANTINE இல்லா போக்குவரத்து !

ஆஸ்திரேலியாவுடனான போக்குவரத்து ஏற்பாடுகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்குவது குறித்து NZ Prime Minister Jacinda Ardern நம்பிக்கையான கருத்துகளைத் தெரிவித்தார்.COVID 19 காரணத்தால் இரு நாடுகளுக்கும் இடையே போக்குவரத்துப் பயணங்கள் ஸ்தம்பித்துவிட்டது. இரு நாடுகளும், பயணிகள் மற்றும் அன்றாட நிகழ்வுகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தன.

இரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் நல்லுறவை மனதில் கொண்டு தற்போது நியுசிலாந்து அரசு, கிவி குடிமக்களையும், நியுசிலாந்தில் வசிக்கும் ஆஸ்திரேலிய மக்களையும் நாட்டில் நுழைய அனுமதிக்கிறது. அப்படி நுழைபவர்கள் 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதலைக் கடைபிடிக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கட்டாயத் தனிமைப்படுத்துதல் இன்றிப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக Ms Ardern நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.நியுசிலாந்தின் நலனைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுகிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் கலைய முயற்சி செய்கிறோம். நியுசிலாந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே மாநில எல்லைகள் திறக்கப்பட வேண்டும்.

நியுசிலாந்தில் கொரோனா பாதிப்பு அரவே இல்லை என்பதை கருத்தில் கொண்டு,14 நாள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் நியுசிலாந்து மக்கள் ஆஸ்திரேலியாவிற்குள் வரலாம் என Australian Trade Minister Simon Birmingham தெரிவித்துள்ளார்.
கிரிஸ்மஸ் வருவதற்கு முன்பே இரு நாட்டிற்கும் இடையே ஆன போக்குவரத்தை மீண்டும் தொடங்க முயற்சிப்பதாக Ms Ardern’s deputy Winston Peters தெரிவித்தார்.

மேலும் சில மாநிலங்களுக்கு இடையே இருக்கும் கட்டுப்பாடுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் தளர்த்த எண்ணுவதாகவும் Ms Ardern தெரிவித்தார்.ஆஸ்திரேலியா உடனான போக்குவரத்து துவக்கம் மற்ற நாடுகளுக்கும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்