Breaking News

நாடு திரும்பும் பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்துதலை அனுமதிக்க கோரிக்கை !

நாடு திரும்பிய வெளிநாட்டு பயணிகள் காவல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட ஒரு ஹோட்டலில் 24/7 தனிமைபடுத்தப்பட வேண்டும் அல்லது வீட்டு தனிமையில் வைக்கப்படவேண்டும்.

ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான hotel quarantine விசாரணை, வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 84 பக்க இடைக்கால அறிக்கையில் 69 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் மாநிலத்தின் எதிர்கால தனிமைப்படுத்துதல் திட்டத்தை இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. வசதி அடிப்படையில் ஒன்று, வீடு அடிப்படையிலான ஒன்று.

விக்டோரியாவிற்கு திரும்பும் நபர்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் அல்லது அரசு தனிமைப்படுத்துதல் வசதியில் தேவையான கண்காணிப்புடன் மதிப்பிடப்படுவார்கள் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று விசாரணை பரிந்துரைக்கிறது.

கடந்த வாரம் Premier Daniel Andrews, அரசாங்கம் அதன் பரிந்துரைகளை பரிசீலனை செய்து விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடும் என்றார்.
தனியார் பாதுகாப்பை அமர்த்துவதற்கான முடிவை எடுத்தவர் மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையின் உதவியை மறுத்தவர் போன்ற முழு பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் கூடிய இறுதி அறிக்கை டிசம்பர் 21க்குள் வழங்கப்படும்.

விசாரணைக்குழு அதன் இறுதி அறிக்கையை நவம்பர் 6 ஆம் தேதி ஒப்படைப்பதாக இருந்தது. ஆனால், கூடுதல் ஆதாரங்களை ஆராய்வதற்கு மேலும் அவகாசம் தேவைப்பட்டுள்ளது.

பொது விசாரணைகள் முடிந்த பின்னர் புதிய அறிக்கைகளை வழங்குமாறு திரு ஆன்ட்ரூஸ், சுகாதர அதிகாரி Bret Sutton மற்றும் காவல் துறை அமைச்சர் Lisa Neville தெரிவித்தனர்.

கொரோனாவின் இரண்டாவது அலையால் விக்டோரியாவில் 18,000-ற்கும் மேற்பட்ட புதிய நோய் தொற்றுகளும் 800 உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் Jenny Mikakos மற்றும் Department of Premier and cabinet செயலாளர் Chris Eccles ஆகியோர் இந்த திட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணையில் கேட்டதை தொடர்ந்து ராஜினாமா செய்தனர்.