Breaking News

நம்பிக்கையில்லாத தீர்மானம் மலிவான அரசியல் என்று Daniel Andrews அறிவிப்பு !

இந்த கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி விக்டோரிய Premier Daniel Andrews-க்கு எதிராகத் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மலிவான அரசியல் என்று அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை சரியாகக் கையாளவில்லை என்று திரு Andrews-க்கு எதிராக Liberal National Coalition செவ்வாய் அன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது.

விக்டோரியாவின் கோவிட் எண்ணிக்கை தொடர்ந்து குறையாமல் உள்ளது.செவ்வாய் அன்று 12 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது.
premier Hotel Quarantine Program-ஐ சரியாக கையாளவில்லை, ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையின் சலுகைகளைப் புறக்கணித்தார். மேலும் ஒரு பயனும் இல்லாத இந்த கொரோனா கட்டுப்பாடுகளை விதித்தார் என்று எதிர்கட்சித் தலைவர் Michael O’Brien குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் இந்த அரசாங்கம் வேலையின்மையை வளர்த்தது, மக்களின் நம்பிக்கையை போக்கி, நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தை சூன்யமாக்கப் போகிறது என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

லேபர்களிடம் சில இடங்கள் பெரும்பான்மையாக உள்ளதால் இந்த தீர்மானம் நிறைவேறாது. தங்கள் மனாசாட்சிக்கு உண்மையாக இருந்து விக்டொரியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும் என O’Brien, Labor கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

அவர் பேசும்பொழுது அங்கு Premier Daniel Andrews இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.Deputy Premier James Merlino இந்த தீர்மானத்தை எதிர்த்தார்.இந்த பேரிடரைப் பயன்படுத்தி எதிர்கட்சியினரால் செய்யப்படும் மலிவான அரசியல் என அவர் தெரிவித்தார்.

இவ்விவாதம் மாலை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. The Victorian Greens-ம் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்த கொரோனா பிரச்சனையில் இருந்து மீள்வதே நமது முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என MP Ellen Sandell தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகமாக இருப்பாதாக Daniel Andrews தெரிவித்தார். மாநில அளவில் 811 கொரோனா தொற்றும் , தேசிய அளவில் 899 தொற்றுகளும் ,ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.மெல்பர்னின் இரண்டு வார சதவீதம் 10 ஆக உயர்ந்துள்ளது.மர்ம வழக்குகளும் 3 ஆக உயர்ந்துள்ளது.