Breaking News

தேசிய கீதத்தின் மாற்றத்தை விமர்சனம் செய்த Anthony Mundine !

தேசிய கீதத்தில் ஒரு வார்த்தையை மாற்றுவதற்கான மத்திய அரசின் முடிவிற்கு பல வகையான விமர்சனங்கள் வருகின்றன.பலர் இந்த மாற்றத்தை வரவேற்றாலும் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றனர் .

குத்துசண்டை வீரர் Anthony Mundine இந்த மாற்றத்தை “Tokenistic ” என்று விமர்சித்து உள்ளார் .ஆஸ்திரேலிய பாரம்பரியத்தை மீட்டெடுக்க முழுப்பாடலையும் எழுதவேண்டும் என்று அவர் தனது கருத்தை கூறியுள்ளார்.

தேசிய கீதத்தின் இரண்டாம் வாரியான “for we are young and free” என்பது “for we are one and free”-ஆக மாற்றப்பட்டுள்ளது .இந்த மாற்றத்தை Prime Minister Scott Morrison அறிவித்தார் .இந்த திருத்தம் செய்ய அரசாங்கத்தின் பரிந்துரைக்கு Governor-General David Hurley ஒப்புக்கொண்டார் .

இந்த மாற்றம் ஒரு தேசமாக நாம் பயணித்த தூரத்தை விளக்குகின்றது .பலதரப்பட்ட தேசிய வம்சாவளியினரும் ,பல கலாச்சாரத்தை வெற்றிகரமாக பின்பற்றிய நாடாக நாம் இருக்கின்றோம் என்று Scott Morrison கூறினார் .மேலும் இது உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாக நமது தீர்மானத்தை உறுதிப்படுத்துகிறது என்று அவர் கூறினார் .

ஆனால் முன்னாள் NRL star,Mr Mundine இந்த மாற்றத்தை “tokenistic ” என்று விமர்சித்துள்ளார் .இந்த பாடலின் மையப்பகுதி இனவெறி என்றும் இந்த பாடலின் மையமானது வெள்ளை மேலாதிக்கவாதி என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .மற்றம் வேண்டும் என்றால் ஒரு வார்த்தை அந்த மாற்றத்தை கொண்டுவராது என்றும் ,முழு பாடலையும் மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கருப்பு மற்றும் வெள்ளை இனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும் அப்படி செய்தால் மற்றுமே ஒரு தேசம் ஒன்றுபட்டு முன்னேற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Labor’s spokeswoman for Indigenous Affairs, Linda Burney இது குறித்து கூறுகையில் ,மாற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும், உண்மையில் மாற்ற வேண்டியது அரசியலமைப்பில் உள்ள சொற்கள் தான் என்று அவர் விமர்சனம் செய்தார் .

Olympic champion Cathy Freeman இந்த மாற்றத்திற்கு ஆதரவை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . Nationals Senator Matt Canavan இந்த மாற்றத்திற்கான எதிர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .