Breaking News

தேசிய அமைச்சரவை கூட்டம் தள்ளிவைப்பு ! தத்தளிக்கும் மக்கள் !

வெள்ளிக்கிழமை திட்டமிட்ட தேசிய அமைச்சரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை மீட்கும் பணி தாமதமடைந்துள்ளது.

Darwin-ல் மக்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் விரைவில் நாடு திரும்பலாம்.

வணிக விமானங்களில் நாடு திரும்பும் ஆஸ்திரேலியர்கள் NT யின் Howard Spring-ல் ஒரு மாதத்திற்கு 1000 நபர்கள் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறுகின்றனர்.

இது தொடர்பாக விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன .அந்த ஏற்பாடுகளை முடிப்பதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக Scott Morrison தெரிவித்தார்.

திரு மோரிசனின் சிட்னி வருகை ஒரு சில தொழில் நுட்பக் காரணங்களால் தடைபட்டதால் வெள்ளிக்கிழமை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

29,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப விரும்புவதாக அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் முதல் லண்டன் மற்றும் இந்தியாவிலிருந்து சிறப்பு Qantas விமானங்கள் தொடங்கப்படும். சர்வதேச வருகையின் கட்டுப்பாட்டை தளர்த்த அரசு முடிவெடுக்க உள்ளது.

மெல்பர்னின் இரண்டு வார சதவீதம் வியாழனன்று 8.9 ஆக குறைந்துள்ள சூழ்நிலையில் விக்டோரியாவில் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அரசை வலியுறுத்தி வருகின்றது.

பல மாத ஊரடங்கிற்கு பிறகு தாங்கள் சுதந்திரமாக வெளியே நடமாடுவதற்கான அறிவிப்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
விக்டோரியாவை விட NSW-வில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிக தொற்று பதிவாகியுள்ளது மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வியாழன் அன்று 6 புதிய தொற்றுகள் உள்ளூரிலும் 5 புதிய தொற்றுகள் ஹோட்டலில் தனிமைபடுத்தப்பட்டு உள்ளவர்களில் பதிவாகி உள்ளது.
20,000க்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதிக்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகின்றது.

Queensland-ல் Africaவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 15 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.