Breaking News

தெற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து எல்லைகளில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே சென்று வர கொள்கைகள் என்னென்ன?

கடந்த ஆறு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையே சென்று வர கடுமையான கட்டுப்பாடுகளும், மாநிலங்களின் மற்றும் நாடுகளின் எல்லைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்த நிலையில் இப்பொழுது தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாநிலங்களில் கொரானா முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ,இப்பொழுது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப மாநில எல்லைகளிலும் போக்குவரத்துக்கள் தொடங்கி மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன.

Qantas, JetStar மற்றும் Virgin Australia உள்ளிட்ட விமானசேவை நிறுவனங்கள் ஏற்கனவே சேவையை தொடங்கி இருந்த நிலையில் இப்பொழுது நியூ சவுத் வேல்ஸ் மக்கள் வியாழக்கிழமை தெற்கு ஆஸ்திரேலியா எல்லைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் Adelaideக்கும் விமான சேவையை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு மாநிலங்களுக்கிடையே சென்றுவர எல்லைகள் திறக்கப்பட்ட நிலையில் அந்தந்த மாநிலங்களில் எந்த மாதிரியான போக்குவரத்து கொள்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி இங்கு நாம் காண்போம்.

குயின்ஸ்லாந்து

வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் குயின்ஸ்லாந்தின் எல்லைகள் முற்றிலும் தளர்த்தப்பட்டு நியூ சவுத் வேல்ஸ் மக்கள் எந்த ஒரு கட்டுப்பாடுகளுமின்றி வந்து செல்லலாம். அதேபோல குயின்ஸ்லாந்து மக்களும் நியூ சவுத் வேல்ஸ்க்கு சென்று விட்டு தங்களது மாநிலங்களுக்கு திரும்ப செல்ல 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவை இல்லை.எனினும் விக்டோரியாவிலிருந்து குயின்ஸ்லாந்துக்கு வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா

கடந்த செப்டம்பர் 24 இல் இருந்து நியூ சவுத் வேல்ஸ் சவுத் ஆஸ்திரேலியாவின் மாநிலம் மற்றும் எல்லைகளுடன் இணைக்கப்பட்டு குறைந்த அளவு நடமாடும் சமூகங்களின் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சவுத் ஆஸ்திரேலியாவின் எல்லைகளை கடந்து பயணம் செய்து வருபவர்கள் கட்டாயமாக 14 நாட்களுக்கு முன்பாகவே கிராஸ் பார்டர் ரிஜிஸ்ட்ரேஷன் பார்மை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்நிலையில் விக்டோரியாவில் இருந்து தெற்கு ஆசியாவுக்கு பயணம் செய்து வருபவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.

நியூ சவுத் வேல்ஸ்

விக்டோரியா உட்பட மாநிலங்களுக்கு இடையே சென்று வர எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இங்கு இல்லை.விக்டோரியாவில் இருந்துவிட்டு நியூ சவுத் வேல்ஸ்க்கு வர நினைப்பவர்கள் கட்டாயமாக NSW பார்டர் என்ற பார்மேட் வைத்திருக்க வேண்டும்.நியூ சவுத் வேல்ஸில் போடப்பட்டுள்ள கொரானா கட்டுப்பாடுகளை மீறினால் $11, 000 அபராதமும் 6 மாதம் சிறை தண்டனை இரண்டும் கொடுக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

விக்டோரியா

விக்டோரியாவை தவிர இதர மாநிலங்களில் கொரானா நோய்த்தொற்று குறைந்து ,இப்பொழுது எல்லைகளும் திறக்கப்பட்டு போக்குவரத்து உட்பட அனைத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விக்டோரியாவில் இன்னும் கொரானா தொற்று குறையாமல் இருப்பதால்
எந்த ஒரு மாநிலங்களுக்கும் விக்டோரியாவில் இருந்து செல்ல முடியாத நிலை இன்றும் நீடித்து வருகிறது.அவ்வாறு விக்டோரியாவிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியா

மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு வருபவர்கள் கட்டாயம் G2G pass வைத்திருக்க வேண்டும். அதனுடன் இணைந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதலும்.இந்நிலையில் தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்காகவும், அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காகவும், உறவினர்களின் இறப்பு மற்றும் உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தஸ்மனியா

தஸ்மனியாக்கு வரவும், இங்கு இருந்து செல்லவும் உரிய காரணத்துடன் G2G pass பெற்றிருக்க வேண்டும்.அவசரத் தேவைகள் அத்தியாவசிய உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளே வர அனுமதி அளிக்கப்படுகிறது.

வடக்கு எல்லைகள்

விக்டோரியா, சிட்னி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திரும்புவார்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் அவர்களுக்கு ஆகின்ற செலவான $2, 500 பெறப்படுகிறது. வடக்கு எல்லைகளுக்குள் வர நினைப்பவர்கள் கண்டிப்பாக பார்டர் என்ட்றி பார்மை நிரப்பி இருக்க வேண்டும்.