Breaking News

திங்கள், 26 அக்டோபர் 2020Premier வெளியிட்ட அறிக்கை :

Premier வெளியிட்ட அறிக்கை :

விக்டோரியாவில் 139 நாட்களுக்கு முன் இறுதியாக ஜூன் மாதம் 9 ஆம் தேதி எந்த ஒரு தொற்றும் ஏற்படவில்லை.
தொடர் பரிசோதனைகள் மூலம் மீண்டும் zero cases வந்துள்ளது.இந்த வார இறுதியில் வடக்கு புறநகரில் உள்ள விக்டோரிய மக்களை பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்களும் அதை மேற்கொண்டனர்.கடந்த 24 மணி நேரத்தில் 14,024 பரிசோதனைகள் கூடுதாலாகச் செய்யப்பட்டது. அதில் 3,196 பேர் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்.இன்று காலை மேலும் 1157 பரிசோதிக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு தொற்று கூட பதிவாகவில்லை.

தங்கள் சமூகத்துக்கு துணையாக நின்று நம் நாட்டில் பரிசோதனைகளை செய்ய உதவிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அனைத்து செவிலியர்கள், Lab பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், couriers மேலும் இந்த பரிசோதனைக்காக இரவு பகலாக உழைத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் முயற்சியே நம் இலக்கை விரைவில் அடையச் செய்தது. இந்த பரிசோதனை முடிவுகள் நமக்கு பெரும் நம்பிக்கையை தந்துள்ளது. மேலும் தொற்று ஏற்பட்டால் அதை முறியடிக்கும் நம்பிக்கையை தந்துள்ளது.நாம் வெகு நாட்களாக ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் அறிவிப்பை தெரிவிக்க விரும்புகிறேன்.

Melbourne-னில் மூன்றாவது கட்டமாக Lockdown நீக்கப்படுகிறது.மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முன்னர் நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது நமது பாதுகாப்பு.பாதுகாப்பாக இருங்கள். அறிகுறிகள் இருந்தால் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

மூன்றாம் கட்டமாக, வரும் செவ்வாய் இரவு 11:59 முதல் Melbourne நகரம் “stay home”-ல் இருந்து “stay safe”-ற்கு மாறுகிறது. இனி வீட்டை விட்டு வெளியேறுவதற்கான எந்த தடையும் இல்லை.ஆனால் 25-KM அளவு கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும். இது சற்று எரிச்சலை தரும் என்பதை உணர்ந்தாலும் , இது வைரசின் தொற்றை தவிர்க்கவே என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதனால் தான் பிராந்திய விக்டோரியாவிற்கும் Melbourneனுக்கும் இடையிலான எல்லையில் இன்னும் சிறிது காலம் தொடர்ந்து இதே நிலை நீடிக்கும்.மூன்றாம் கட்டத்தில் மெல்பர்னில் உள்ள cafes,உணவகங்கள், pubs மீண்டும் திறக்கப்படும்.வெளிப்புற நிகழ்ச்சிக்கு 30 பேரும், உட்புற நிகழ்ச்சிக்கு 20 பேரும் அனுமதி.

இதில் density limits, record keepings மற்றும் கோவிட் பாதுக்காப்பு திட்டங்களை கடைபிடிக்க வேண்டும்.மற்ற வியாபரங்களும் திறக்கப்படலாம்.அழகு மற்றும் personal care சேவைகள் மீண்டும் தொடங்கலாம். அவ்வாறு தொடங்கப்படும் வணிகங்களில் பணியாளர்கள் நேரடியாக onsite-ல் கலந்துகொள்ளலாம்.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் வெளிபுற contact sports-ஐ மீண்டும் தொடங்கலாம். பெரியவர்களுக்கான Non-Contact Sports, Ftness மற்றும் நடன பயிற்சி வகுப்புகள் வெளிப்புறங்களில் 10 பேர் கலந்து கொண்டு நடத்தலாம். Outdoor pools 50 பேர் வரை அனுமதி. இதில் பாதுகாப்பையும்,கட்டுப்பாடுகளையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

நூலகங்களும், சமுதாயக் கூட இடங்களும் வெளிப்புற நிகழ்வுகளுக்காக திறக்க அனுமதி. வெளிப்புற பொழுதுபோக்கு இடங்களும்பார்வையாளர்களை அனுமதிக்கத் தொடங்கலாம்.மத நம்பிக்கையாளர்கள் தங்களின் மத நிகழ்ச்சிகளில் 20 பேர் வரை பங்கு கொள்ள அனுமதி. இவர்களுடன் சேவை செய்பவர்கள், உதவியாளர்கள் என்று 10 பேர் வரை அனுமதி.

திருமணத்தில் 10 பேரும். இறுதிச் சடங்கில் 20 பேரும் பங்கு பெற அனுமதி.பணியிடங்கள் தங்களின் பணியை செய்வத்றகான அனுமதி சீட்டு இனி வாங்க வேண்டிய தேவையில்லை. ஆனால் வீட்டிலிருந்து வேலை செய்வது சாத்தியம் என்றால் அதை செய்வது உத்தமம்.

Melbourne மற்றும் ப்ராந்திய விக்டோரியாவிற்கு இடையே போக்குவரத்து செய்யும் பணியாளர்களுக்கு work permit அவசியம்.பெரும்பாலானோர் தங்களை பார்க்க இயலவில்லை என்ற வருத்தம் அனைவரிடமும் உள்ளது. நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் உட்புறங்களில் நாம் ஓய்வாக இருக்கும்பொழுதுதான் இந்த வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தளர்வுகளை நாம் எப்படி பாதுகாப்பாக கையாளப் போகிறோம் என்பது முக்கியம்.இதை பற்றி நாளை மேலும் அறிவிக்க உள்ளேன்.

இந்த தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால் நவம்பர் 8 முதல் 25km கட்டுப்பாடு அளவு ரத்து செய்யப்படும்.
Melbourne-னிற்கும் பிராந்திய விக்டோரியாவிற்கும் இடைய இயல்பு நிலை கொண்டு வரப்படும்.அதாவது பிராந்திய விக்டோரியாவில் கொண்டு வந்த தளர்வுகள் Melbourne நகருக்கும் பொருந்தும்.

Pub மற்றும் உணவகங்களில் இருப்போரின் எண்ணிக்கை உள்ளே 40 ஆகவும் வெளியே 70 ஆகவும் உயர்த்தப்படும்.மதக்கூட்டங்களில் மதத்தலைவர் உட்பட் 20 பேர் உட்புறமும் வெளியே 50 பேரும் அனுமதிக்கப்படுவர்.Gyms மற்றும் உள் விளையாட்டு அரங்கங்கள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் திறக்கப்படும்.

மேலும் Melbourne மக்கள் விடுமுறையை பெற்றுக்கொண்டதால் தங்கும் இடங்களும் திறக்கப்படும்.நகரத்தின் எல்லை மற்ற மாநிலங்களுக்குத் திறக்கப்படும்.பல நாட்களாக தங்கள் அன்பிற்குரியவர்களை பார்க்க முடியாமல் தவிக்கும் எண்ணற்ற விக்டோரிய மக்களுக்கு இது பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.

குடும்பங்கள் ஒன்றிணையப் போகிறது. நம் தேசம் ஒன்றிணையப் போகிறது.மேலும் பல கேள்விகள் மக்கள் மனதில் இருக்கும் என்பதை நான் அறிவேன்.. அனைத்து சந்தேகங்களுக்கும் நவம்பர் 8 அன்று பதில் கிடைக்கும்.கோவிட் இல்லா கிறிஸ்துமஸை நோக்கி நாம் செல்ல வேண்டும். நம் இலக்கு அதுதான்.

இந்த நம்பிக்கை நம்மை வழி நடத்திச் செல்லும். நமது கட்டுப்பாடுகள் தளர்ந்ததே ஒழிய நமது பொறுப்புணர்ச்சி தளர்ந்து விடக் கூடாது.
நமது முயற்சியால் நாம் இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டோம் .இது தொடர்வதும் நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவதும் அனைத்து விக்டோரிய மக்களின் முயற்சியில் தான் இருக்கிறது.

நாம் வெல்வோம்.