Breaking News

தளர்க்கப்பட்ட விதிமுறைகள் ! பெருமூச்சி விட்ட மக்கள் !

நியூ சவுத் வேல்ஸ் எல்லையில் கட்டுப்பாடுகள் தளர்கிறது ! “மிகவும் தகுதியானவர்கள்” என்று புகழாரம் !

எல்லையில் கொரோனா காரணத்தால் போடப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுள்ளனர். விக்டோரியாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு உள்ளதால், வரும் வியாழக்கிழமை முதல் அனைவரும் ஜாக்கிரதையாகவும்,பாதுகாப்பாகவும் இருக்கும் படி சுகாதார அமைச்சர் Brad Hazzard அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமர் Gladys Berejiklian இந்த மாத தொடக்கத்திலேயே, பார்டர் பஃபர் ஸ்ஓன் “border buffer zone” 2.5 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை நீடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தளர்த்தப்பட்ட விதிமுறையின்படி விக்டோரியாவில் இருந்து எல்லைகளைத் தாண்டி பொருட்கள் மட்டும் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும்,மேலும் பள்ளிகளுக்கும், வேலைகளுக்கும் செல்லவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தகுந்த பாதுகாப்பை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

தற்போது விதிமுறைகள் சற்று தளர்க்கப்பட்டதனால் , எல்லையில் வாழும் மக்கள் அனைவரும் இந்த மாற்றங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ,இதனால் அங்கு வாழும் மக்களுக்கு வாழ்க்கை முறையும் , சற்று எளிதாகும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.இந்த கொரோனா தொற்று மிகவும் சவால் நிறைந்ததாக இருப்பதால் ,தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றோம், இதனால் நூறு ஆண்டுகளுக்கு விக்டோரியா மற்றும் NSW மக்கள் மிகவும் நிம்மதியுடனும்,சந்தோஷத்துடனும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார் .

இதுதொடர்பாக ஆல்பரி ஜஸ்டின் கிளான்ஸி (Albury Justin Clancy) கூறுகையில் ,”முர்ரேயின் இருபுறமும் வாழ் மக்களும் இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு முன்னணியில் இருக்கின்றனர். விக்டோரியா தான் இந்தக் கொடுமையான தொட்டியில் இருந்து மீண்டு வரவும், வழக்கம்போல் பழைய நிலைமைகள் திரும்ப கிடைத்ததற்கு காரணம் ,அதற்கு முக்கிய காரணம் ,அவர்கள் பின்பற்றிய விதிமுறைகள் ஆகும், ஊரடங்கின் போது அரசு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் ,சரியாக பயன்படுத்தி இதிலிருந்து அதிக அளவில் மீண்டு உள்ளதாகவும் கிளான்ஸி கூறினார். விக்டோரியாவில் வாழும் மக்கள் இனிமேல் NSWவில் நுழைவதற்கு தடை கிடையாது என்றும் அவர் கூறினார். ஜூலை தொடக்கத்தில் இருந்து NSW-விக்டோரியா எல்லையில் மற்றும் 55 குறுக்கு வழிகளிலும் கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் குறிப்பிட்டு உள்ளார்.