Breaking News

தடைகளை எதிர்கொள்ள பல்வேறு பிரிவுகளில் இருந்து ஒன்று கூடிய இளம் சிங்கங்கள்!

பலவிதமான இளம் தலைமுறையினர்கள் ஒன்றுகூடி தேசிய ஆலோசனைக் குழுவில் கலந்து கொண்டு தடைகளை எதிர் கொள்வதைப் பற்றியும் அந்தந்த சமூகங்களில் முதன்மையானவர்களாக ஆவது பற்றியும் வீடியோ கான்பரன்சிங்கில் உரையாடி உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள Multicultural Youth Advocacy Network (MYAN Australia)
கமிட்டியின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றதையடுத்து அதில் தற்போது உள்ள தடைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த பல்வேறு சமூகத்தைச் இளைஞர்கள் பல முக்கியமான தகவலை பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

இவ்வாறு அமைக்கப்பட்ட கமிட்டியில் கலந்து கொண்ட இளம் தலைமுறையினர்கள் ஒன்றுகூடி இனவெறி, பாகுபாடு, வேலைவாய்ப்பு வரம்புகள் அத்தியாவசிய தேவைகளில் உள்ள தடைகள் மற்றும் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள தொய்வு உள்ளிட்டவற்றை பல்வேறு சமூகத்தைச் சார்ந்த இளம் தலைமுறையினர்கள் பேசியுள்ளனர்.

MYAN ன் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ள Nadine Liddy இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் புலம்பெயர்ந்த பின்புலத்தை கொண்ட இளம் தலைமுறையினர்கள்
தங்களுக்கு இருந்த தடைகளை எல்லாம் தகர்த்துக்கொண்டு இப்பொழுது இங்கு நம் கண்முன்னே வெற்றியாளர்களாக கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர்.

அம்பாசிடர் Jane Chan இந்த ஆய்வில் கூறியதாவது இங்கு உள்ள பல்வேறு இனவெறி மற்றும் பாகுபாடு என அனைத்தும் இங்கு சமமானதாக இல்லை
மற்றும் இளம் தலைமுறையினர்களின் முன்னெடுப்பால் குறிப்பிட்ட காலங்களின் பாகுபாடுகள் முற்றிலும் அழிந்து பகுத்தறிந்து பேசி வருகின்றனர்.

கமிட்டி அரசாங்கத்தின் கொள்கைகளில் இருந்து எந்த ஒரு பதில்களும் கிடைக்காத பட்சத்தில் இளம் தலைமுறையினரின் கமிட்டியில் அந்தக் கொள்கைகள் தோல்வி அடைந்துள்ளன என Ms Liddy கூறியிருக்கிறார்.