Breaking News

டொனால்ட் டிரம்ப் புதிய வீடியோவில், அதிகாரத்தை மாற்றி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் !

அதிபர் டிரம்ப் தனது ட்விட்டரில் வெளியிடப்பட்ட புதிய வீடியோவில், தேர்தலில் வாக்குகள் திருடப்பட்ட நிலையில் அதிகாரத்தை மாற்றி கொடுத்துவிடலாம் என தெரிவித்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கேபிடல் கட்டிடத்தைத் தாக்கி, போலீசாருடன் மோதினர்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றி அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், “தேர்தல் முடிவுகளுடன் நான் உடன்படாதபோதும், ஜனவரி 20ஆம் தேதி முறைப்படி ஆட்சி மாற்ற நடவடிக்கை இருக்கும்.

முன்னதாகவே அவர் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதால் “நாங்கள் கேபிட்டலுக்கு நடந்து சென்று துணிச்சலான செனட்டர்கள், பெண்களை என ஆதரவாளர்களை சேர்த்து உற்சாகப்படுத்தப் போகிறோம்” என்று அவர் புதன்கிழமை அன்று கூறினார்.

ஆனால் நடந்த கலவரத்தை கேபிடல் மீதான “கொடூரமான தாக்குதல்” என்றும், அதில் அத்துமீறியவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் டிரம்ப் கூறினார். தேர்தல் சரியான முறையில் நடக்காமல் வாக்குகள் திருடப்பட்டதாகக் கூறி டிரம்ப் தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு, கேபிடல் கட்டிடத்தில் அணிவகுத்துச் செல்ல அவர்களை ஊக்குவித்ததால் தான் இந்த தாக்குதல் நடந்தது.

நடந்த தாக்குதலில், கேபிடல் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் , கேபிடல் கட்டிடத்திற்குள் மார்பில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு பெண் போலீஸ் அதிகாரி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர் . மேலும் தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் காயமடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி முனையில், உத்தரவை மீறி கட்டிடத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக 60 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.