Breaking News

டாஸ்மேனியாவை போல் எல்லையை திறக்கும்படி WA மற்றும் Qld-க்கு NSW Premier கோரிக்கை !

NSW Premier Gladys Berejikliyan தனது WA மற்றும் Queensland-இல் வேலை இழப்பை தவிர்க்க ,எல்லைகள் அனைத்தையும் திறக்க , டாஸ்மேனியாவின் வழியை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வாரம் Tasmania தனது எல்லையை ஏழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக திறந்த பின்னர் NSW குடியிருப்பாளர்கள் இப்போது ஆப்பிள் தீவுக்கு சுதந்திரமாக பயணிக்க தொடங்கி உள்ளனர் .

இந்த மாற்றம் NSW-விலிருந்து பயணிக்கும் நபர்களுக்கான தனிமைப்படுத்துதலின் தேவையை நீக்குகிறது, அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் நவம்பர் 23 அன்று விக்டோரியாவில் இருந்து வரும் மக்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Ms Berejikliyan அறிவித்த 48 மணி நேரத்தில் NSW மற்றும் விக்டோரியாவிற்கு இடையே 25,000 விமான டிக்கெட்டுகள் விற்றதாக Budget Airlines Jetstar தெரிவித்துள்ளது.

விக்டோரியாவில் தொடர்ந்து ஏழாவது நாளாக கோவிட் 19 தொற்று எதுவும் பதிவாகவில்லை.

NSW-உள் நாட்டில் பரவும் கோவிட் தொற்று குறைவாக இருந்தாலும் வரவிருக்கும் விடுமுறை காலங்களில் கூட்டங்களின் அதிகரிப்பு ஒரு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகின்றது .

NSW-ல் ஒரு கோவிட் நோயாளி திவர சிகிச்சையில் ventilator வசதியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.மாநிலத்தின் தெற்கு Highlands-ல் உள் நாட்டில் நான்கு கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளது. ஒரு பள்ளி மற்றும் குழந்தை பராமரிப்பு மையம் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்ய மூடப்பட்டது.

வியாழன் அன்று உறுதி செய்யப்பட்ட ஒன்பது NSW தொற்று நோய்களில் நான்கு சமூகத் தொற்று. மீதமுள்ள ஐந்து பாதிப்புகள் ஹோட்டல் தனிமைப்படுத்துதலில் உள்ள ஐந்து நாடு திரும்பிய பயணிகளில் என்று கண்டறியப்பட்டது.