Breaking News

சுகாதார வல்லுனர்கள் அனுமதித்தால் பயணிகள் ஹோம் கோரன்டைன் எடுத்துக் கொள்ளலாம் !

ஆஸ்திரேலியாவிற்கு வரும் பயணிகள் சுகாதார வல்லுனர்கள் அனுமதித்தால் 14 நாட்கள் ஹோம் கோரன்டைன் எடுத்துக்கொள்ளலாம் என பயணிகளின் கோரிக்கைக்கு Prime Minister Scott Morrison பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு பின் உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில், சுகாதாரத் துறை வல்லுநர்கள் அவ்வாறு வருபவர்களை ஹோம் கோரன்டைன் எடுத்துக்கொள்ளலாமா என்பதைப் பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் சுகாதார நிலையை பற்றி உறுதிப்படுத்தியுள்ள Prime Minister Scott Morrison கொரானா தொற்று இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளை ஆஸ்திரேலியாவுக்குள் ஹோம் கோரன்டைன் கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பதை பற்றி சிறப்பு குழுவுடன் இணைந்து ஆலோசித்து வருகின்றனர்.

நாட்டின் எல்லைகளைத் தாண்டி உள்ளே வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் இரண்டு வாரங்கள் ஹோட்டல் கோரன்டைன் இருக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவுரை படுத்திருந்த நிலையில் வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் பிரபலமான நாடுகளில் ஒன்றான டென்மார்க் மற்றும் கிரீஸ் உள்ளிட்ட சில நாடுகளுக்கு நோய்தொற்று பரவல் மிகக்குறைவாக அதே சமயம் ஆபத்து இல்லாத பகுதிகளிலிருந்தும் நாடுகளில் இருந்தும் வருபவர்களை அனுமதிப்பதோடு அவர்களை ஹோம் கோரன்டைன் செய்யவும் அறிவுறுத்தி உள்ளனர்.

அதே போல ஹாங்காங் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கூட போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அனுமதித்து வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவும் உள்ளடங்கும்.

ஆரம்ப காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த போது ஆஸ்திரேலியாவுக்கு வரும் அனைவரையும் ஹோஸ்டல் சிஸ்டம் முடியும் வரை கோரன்டைனில் இருக்கவேண்டுமென கூறப்பட்டிருந்தது.மேலும் இதைப் பற்றி Prime Minister Morrison கூறியதாவது,” சீனா மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளைச் சார்ந்தவர்கள் ஹோம் கோரன்டைனை அரசு கூறிய படி கடை பிடித்துள்ளது நாட்டின் பாதுகாப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்” என கூறியிருந்தார்.

விக்டோரியாவில் ஹோட்டலில் நடந்த மிகப் பெரும் பிழை நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது, இதில் இருந்து அவர்களது அனுபவம் என்ன என்பதை மற்ற மாநிலங்களும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது என Prime Minister Scott Morrison விக்டோரியா அரசின் அலட்சிய தன்மையை பற்றி விளாசியுள்ளார்.