Breaking News

சிட்னி மற்றும் மாநிலத்தின் பிராந்தியப் பகுதிகளில் இந்த கிறிஸ்துமஸ் எப்படி இருக்கும் – NSW அரசாங்கம் விவரித்துள்ளது !

டிசம்பர் 24 முதல் 26 வரை, தற்போதைய கொரோனா தாக்கத்தின் மையப்பகுதியான சிட்னியின் வடக்கு கடற்கரைகள் மாறுபட்ட விதிகளுடன் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும். NSW இன் பிற பகுதிகளிலும் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Northern Beaches peninsula zone:

இந்த மண்டலத்தில் Narrabeen பாலம் மற்றும் Mona Vale சாலையில் இருக்கும் பஹாய் கோயிலின் கட்டுப்பாடுகள் :

*ஒரே மண்டலத்தில் இருக்கும் மக்கள் பிற வீடுகளுக்கு செல்லலாம்
*குழந்தைகள் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதி
*தான் வசிக்கும் மண்டலத்தில் இருந்து வெளியே செல்லவும் ,உள்ளே வரவும் யாருக்கும் அனுமதி கிடையாது.

  • டிசம்பர் 27 முதல் இந்த கட்டுப்பாடுகளில் சில மாற்றங்களும் வரும்.

Northern Beaches zone south of Narrabeen bridge:

*10 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் அடங்குவர்.
*Northern beaches வெளியே வாழ்பவர்கள் வரலாம்.
*குடியிருப்பாளர்கள் தங்கள் மண்டலத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதி கிடையாது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எடுக்கப்பட்ட முடிவுகள் :

  • புதன்கிழமை அன்று முடிவுக்கு வரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று NSW Premier Gladys Berejiklian
    கூறினார் .
    *சிட்னி மற்றும் வடக்கு கடற்கரையின் வடக்கு பகுதியிலிருக்கும் விதிகளுக்கு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..
    *மாற்றப்படும் விதிகள் அணைத்தும் டிசம்பர் 27-ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று NSW Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
    *புத்தாண்டு தினத்தன்று நடக்கவிருக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகள் குறித்த முடிவுகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பிறகு பரிசீலனை செய்யப்படும்
    என்று அவர் கூறினார்.

நாட்டின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது?

*நாட்டின் மற்ற பகுதிகளில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாததனால் கிறிஸ்துமஸை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
*விக்டோரியாவில் 30 பேர் வரை ஒன்று கூடலாம் என்றும், குயின்ஸ்லாந்தில் 50 பேர் வரை ஒன்று கூடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
*ஒவ்வொரு மாநிலமும், பிரதேசமும் தங்கள் எல்லைகளை சிட்னிக்கு மூடப்பட்டுள்ளன , WA அனைத்து NSW-க்கும் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.