Breaking News

சிட்னி செவிலியருக்கு கொரோனா பாதிப்பு ! NSW-வில் மேலும் மூன்று தொற்று உறுதி !

NSW புதியதாக இரண்டு கோவிட் தொற்றுகளைக் கண்டறிந்துள்ளது. இதில் St Vincent’s மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒரு நோயாளிக்கு தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்.மிகவும் குறைவான சக ஊழியர்கள் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

அந்த செவிலியருக்கு மருத்துவமனைக்கு வெளியே தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து உள்ளனர்.அவர் மூலம் இரண்டாவது நபருக்கு பரவியுள்ளது.வெள்ளி இரவு 8 மணி அளவில் Brisbane னிலிருந்து Port Of New Castle-க்கு கப்பலில் வந்த குழு உறுப்பினர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு John Hunter மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் இருந்த மற்ற குழு உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

இந்த தொற்றால் New Castle மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.NSW-Queensland எல்லையை மூடும் விவாகாரம் குறித்து மாநில அரசுகளுக்குள் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் NSW-வில் செய்யப்பட்ட கோவிட் பரிசோதனைகள் 12,868ல் இருந்து 15,439 ஆக உயர்ந்தாலும், சமீபமாக பரிசோதனைகள் குறைந்துள்ளது கவலை அளிப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொற்று அறிகுறி இருக்கும் மக்களை பரிசோதனை மேற்கொள்ள அறிவுரைத்தி வருகிறது அரசு.NSW Health மொத்தம் 56 கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதில் ஒருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.NSW-வின் சமீபத்திய தொற்று எண்ணிக்கை 4084. பலியானவர்கள் எண்ணிக்கை 55 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது