Breaking News

சிட்னி கடற்கரையில் விடுமுறையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகளவில் கூடியதால் அந்த பகுதிக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!

சிட்னியில் உள்ள பிரபலமான சில கடற்கரைகளில் அதிக அளவில் மக்கள் வெள்ளம் கூடி வருவதால் உடனடியாக இந்தப் பகுதியை மூடும்படி அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திங்கட்கிழமை அன்று bondi கடற்கரை உள்ளிட்ட பிரபலமான சில பகுதிகளில் வெப்ப சலனம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் சிட்னியில் உள்ள கடற்கரைகளில் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான Cronulla கடற்கரை திங்கட்கிழமை அன்று மதியம் அதிக மக்கள் கூடியதால் மூடப்பட்டது.

Waverley council முன்கூட்டியே Bondi கடற்கரை அதன் கொள்ளளவை நெருங்கி வருவதால் அங்கு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு ஆலோசித்து அங்கிருக்கும் நிலைமையை புரிந்து கொண்டு பயணத்தை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளது.

ஒருவேளை அரசு கூறிய விதிமுறைகளை மதிக்காமல் மக்கள் தொடர்ந்து Bondi கடற்கரைக்கு தொடர்ந்துவருவார்களேயானால் கட்டுப்பாடுகள் மிக கடுமையாகவும் அதேசமயம் சில மணி நேரங்களிலேயே கடுமையான கட்டுப்பாடுகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையிலும் நிலைமை ஏற்பட்டுவிடும் என கவுன்சில் கூறியுள்ளது.

ஒருவேளை நீங்கள் இதுவரை கடற்கரைக்கு செல்லாமல் இருந்திருந்தால் அடுத்த நாட்களில் செல்ல திட்டம் வைத்திருந்தால், பயணத்திற்கு முன்பாகவே கடற்கரையின் நிலைமையை பற்றி ஆராய்ந்து யோசித்துவிட்டு, செல்லக்கூடிய வகையில் இருக்குமேயானால் தொடரலாம்.

Bondi கடற்கரை நிரம்பி வழியும் பொழுதே நல்லவேளை எங்களது செய்தி மக்களை சென்றடைந்து விட்டது, எனவே அவர்கள் அடுத்த வருகை தர உடனடியாக திட்டமிட்டு கொண்டனர் என Mayor Paula Masselos கூறியிருக்கும் அதேசமயம் Randwick City Council பெரும்பான்மையான கடற்கரைகள் அதன் கொள்ளளவை அடைந்துவிட்டது எனக் கூறியுள்ளது.

NSW வில் தொடர்ந்து பத்தாவது நாளாக எந்த ஒரு புதிய கொரானா நோய் தொற்றும் கண்டறியப்படாத நிலையில், ஹோட்டலில் தனிமை படுத்தப்பட்டு இருக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டுமே கொரானா அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது என கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சொல்லப்படுகையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கடந்த 24 மணி நேரத்தில் 8, 305 பேரில் வெறும் 4789 பேருக்கு மட்டுமே கொரானா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து இருக்கின்றனர். மேலும் NSW வில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8, 000 பேருக்காவது கொரானா பரிசோதனை செய்யவேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அதில் அறிவுறுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.