Breaking News

சிட்னியின் Northern Beaches-லிருந்து வந்த விக்டோரியா இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி !

மீண்டும் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலினால் முடக்குதல் அறிவிக்கப்பட்ட சிட்னியின் Northern Beaches-ல் இருந்து திரும்பிய விக்டோரியா இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் இருவர் வெளிநாடுகளில் இருந்து வந்ததாகவும் ஒருவர் 15 வயது நிரம்பிய சிட்னியில் இருந்து திரும்பிய இந்த இளைஞரும் ஆவார்.

சிட்னியில் இருந்து திரும்பிய இந்த விக்டோரியா இளைஞரும் மற்றும் அவரது தாயும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். சிட்னியில் உள்ள சூழ்நிலையை பற்றிய விழிப்புணர்வு இருந்ததால், இந்த இளைஞர் பரிசோதனை மேற்கொண்டார். அதில் இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரின் தாயாருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த 15 வயது இளைஞர் Northern Beaches-ல் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகளான Avalon RSL மற்றும் Avalon Bowling Club -க்கு சென்று வந்துள்ளார். தற்போது அவரது குடும்பத்தினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக Victorian Health Minister Mr.Foley தெரிவித்துள்ளார்.

Greater Sydney மற்றும் Central Coast -ல் இருந்து விக்டோரியா வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் NSW -வின் பிறபகுதிகளில் இருந்து வரும் பயணிகள் அனுமதி பெற்று வரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

விக்டோரிய வாசிகள் அவர்கள் விரும்பினால் அவர்கள் சொந்த வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 53 நாட்களாக எந்த சமூக பரவலும் இல்லை என்ற நிலையை காப்பாற்றுவதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், இதை நாம் ஒரு முக்கியமான பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் Mr.Foley தெரிவித்துள்ளார் . Northern Beaches -ல் தொற்று எண்ணிக்கை 83 ஆக அதிகரித்ததால், இந்த சமூக பரவலின் பின்புலம் பற்றி ஆய்வு நடைபெறுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Northern Beaches-ல் வசிப்பவர்கள் வரும் புதன்கிழமை வரை வீட்டிலேயே இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே அவர்கள் வெளியே வரலாம் என கூறப்பட்டுள்ளது. தொற்று உறுதியான சிலர் Northern Beaches-க்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு சென்று வந்துள்ளதாக கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக NSW Chief Medical Officer Kerry Chant தெரிவித்துள்ளார்.

Turramurra Salon for Hair மூலம் 5 தொற்றுகளும் , Rose Of Australia விடுதியின் மூலம் 2 தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. தொற்று உறுதியானவர்கள் சென்ற இடங்களை பற்றிய தகவல்கள் NSW Health Website-டில் பதிவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. US-ல் இருந்து வந்த ஒரு பெண்ணின் மூலமாக இந்த தொற்று பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்பரவலிற்கான காரணம் பற்றி ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், CCTV கண்காணிப்பு மற்றும் பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மூலம் ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.