Breaking News

சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா. படக்கவிதை. கொலு பொம்மைகள்.!

சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா. படக்கவிதை. கொலு பொம்மைகள்.! கொலு வைக்கும் வீட்டுக்கெல்லாம் கூட்டமாக போவோம்.! அடுக்கி வைத்த பொம்மை முன்னே பாட்டுப்பாடி மகிழ்வோம்.! விதவிதமாய் பொம்மைகளை விருப்பமாக பார்ப்போம்.! வீட்டுக்குள்ளே சுண்டல் மணக்க விழுந்துவிழுந்து துதிப்போம்! . . . அய்யங்கார் மாமிவந்து அன்புடனே வழங்க.. அங்கேயே வாயில் போட்டு ஆனந்தமாய் சிரிப்போம்! கணக்குப்பிள்ளை வீட்டுச்சுண்டல் கமகமன்னு மணக்க.. காதுகிழியும் படிக்கு நாங்க பாட்டுப்பாடி கிடப்போம்.! ஏழைவீட்டில் பொரி கொடுப்பார் இதயம்மகிழ ஏற்போம்.. எதிர்த்த வீட்டில் பானகம்தான் இஷ்டப்படி குடிப்போம்.! இராமன் பொம்மை.. இயேசு பொம்மை.. இராவுத்தர் பொம்மை.. அரசன் பொம்மை.. ஆண்டி பொம்மை.. அரையாடை காந்தி பொம்மை.. மேளக்காரர் நாதஸ்வரம் ஊதுவோரின் பொம்மை.. கூலிக்காரர் புல் சுமக்கும் பொண்ணுத்தாயி பொம்மை.. வேறுபாடு ஏதுமின்றி.. கொலுவிருக்கும் காட்சி.! ஏழைப்பாழை யாவரையும் உள்ளழைத்து உபசரிக்கும் மாட்சி.! சின்னஞ்சிறு வயதினிலே கொலு உரைக்கும் கருத்தை.. கொலுகொலுன்னு வளர்ந்த பின்னே நினைத்தாலே இனிக்கும்.! கொலுபொம்மை நமைப் பார்த்து சிரிக்கும் போது சிரித்தோம்! கொடும் பிரிவு சாதி பேதம்.. வளர்ந்த இந்த நாளிலே.. கொடுமைகளை கண்டுகொண்டே .. பொம்மைகளாய் இருந்தோம்! அந்தக்காலம் எந்த நாளில் திரும்பிடுமோ தோழா.. அந்த கொலு பொம்மைகளைப் காணவில்லை வெகு நாளா.!