Breaking News

கொரோனா வைரஸ் பாதிப்பால், ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்ந்த மக்கள் பெருமளவு மன அழுத்தத்தில் உள்ளதாக தகவல் !

உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடுத்தாக வேண்டும் ! அரசிடம் வேண்டுகோள் !

UNSW புள்ளி விவரத்தின் படி, புலம்பெயர்ந்தவர்களின் 10 பேரில் 9 பேர் கொரோனா தொற்றின் போது உதவிக்கு வந்ததாகவும், அத்தனை பேரும் கொரோனா தொற்றால் பெருமளவு வருமான வீழ்ச்சியை சந்தித்து இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகிறது.

தொண்டு நிறுவனங்களிலும், சமூக சேவைகளுக்கும் இந்த கொரோனா தொற்றால் நிதிகளும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் UNSW மேற்கொண்டுள்ள ஆய்வில், புலம் பெயர்ந்த மக்களும் , பல கலாச்சார மக்களும் , பழங்குடி மக்கள் என்று பல துறைகளில் வேலை செய்பவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு தேவைகள் அனைத்தும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், 21% நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை நேரத்தை குறைத்துள்ளது, 31% ஊழியர்களின் ஆள் சேர்க்கும் பணிகளையும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி செய்து இருப்பதனால், பெரிய அளவு முதலீடு வருமானத்தை அரசு இழந்துள்ளது, கார்ப்பரேட் நன்கொடைகளும், குறைந்த வருமானம் மற்றும் மாநில இழப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. கூலித் தொழிலாளர்களின் ஊதியம் ,மானியங்களும் குறைக்கப்படும் பொழுது வேலைகளையும் குறைக்க வேண்டும் என்று வேலை வழங்குபவர்களில், ஐந்தில் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியா சமூகசேவை கவுன்சில் தலைவர் கசாண்ட்ரா கோல்டி(Cassandra Goldie) இது குறித்து கூறுகையில்,” சமூக ஊழியர்களின் தேவைகள் அதிகரிக்கும் பொழுது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர். அந்த சமயத்தில், தனது சொந்த நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சினைகளையும், வருமான ரீதியாக ஏற்படும் கவலைகளையும் தெரிவிக்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும், தொழிலாளர்கள் மட்டுமே சமூக வளர்ச்சிக்கு அதிகமாக பாடு படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக அக்கறை ஆர்வலர்களுக்கு அதிகமான நிதி உதவியை கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நடக்காவிட்டால், ஏற்கனவே இருப்பதைவிட அதிக தேவைகள் இருக்கும் நேரத்தில் உழைப்பாளர்களின் சேவைகளும் முடக்கப்படும். ஊழியர்களின் நேரம் ,வேலை மற்றும் தேவைகள் அனைத்தும் குறைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

2012இல் அமைக்கப்பட்ட ஊதிய ஆனை படிவங்கள் அனைத்தையும், புதுப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் சமுதாய துறை நிறுவனங்களுக்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு நியாயமான சம்பளத்தை கொடுக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.

2020 /21இல் $ 554 மில்லியன் மதிப்புள்ள சப்ளிமெண்ட்கள் அனைத்தும் ஜூன் 2021இல் முடிவடைய போவதையும் நினைவு கூர்ந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் தாக்குதல், வருமான ரீதியாகவும், மனரீதியாகவும் அனைவரையும் பெரிய அளவு பாதித்துள்ளது. குடும்பத்தில் பல பேர் இதனால் மனஅளவில் பாதித்துள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.