Breaking News

கொரோனா வைரஸ் நிதி தொகையை நிறுத்த அரசு முடிவு ?

கொரோனா வைரஸ் காரணமாக ,அரசு மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்த நிதி தொகையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தொற்றினால் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு,அரசு பலவிதமான நிதி தொகைகளையும், உதவிகளையும் செய்து வந்தது.வேலை தேடுபவர்கள் இளைஞர்கள்,பெண்களுக்கான ஊக்கத்தொகை போன்ற பல உதவிகளை அரசு செய்தது.

செப்டம்பர் 25ஆம் தேதி முதல் கொரோனா தொற்று கட்டணங்கள் 15 நாட்களுக்கு, 550 டாலர்களில் இருந்து 250 டாலராக குறைக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஜனவரி 1 இல் இருந்து இந்த ஊக்கத்தொகை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்துள்ளனர். இந்த பாதுகாப்பு தொகைகள் குறைக்கப்படுவதால் ஒரு மில்லியன் வேலையற்ற ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நாடு மந்த நிலைக்கு மாறிவிடும் என்றும் கூறுகின்றனர்.

வேலை இல்லாமல் திண்டாடும் மக்களின் சதவீதமும் குறைந்துள்ளது, ஜூலை மாதத்தில் 7.5 சதவீதத்தில் இருந்து ஆகஸ்ட் 6.8 ஆக குறைந்துள்ளது. கூடுதல் கட்டணத்தை மீண்டும் அளவிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை ஆதரிப்பதாகவும் Treasurer Josh Frydenberg கூறியுள்ளார். மேலும் வேலை தேடுபவர்களுக்கும் கூடுதல் உதவியும் ஆதரவும் செய்வது குறித்து நாங்கள் முடிவை எடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளும்,பாதுகாப்பையும் அரசு நீண்ட நாட்களாக செய்து கொண்டிருக்கின்றது.வேலைதேடும் வேலை இல்லாதவர்களுக்கு ஒரு நாளைக்கு 58 டாலராக இருக்குமென்றும், கொரோனா ஊக்கத்தொகை ஒரு நாளைக்கு 40 டாலர்கள் என்ற கணக்கில் ஒப்பிடும் பொழுது வருமானம் போதுமானதாக இல்லை என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் ,குழந்தை இல்லாத ஒரு தனிநபர், 15 நாட்களுக்கு 815 டாலர்களும், வேலை தேடுபவர்களுக்கு 565 டாலர்களும், கொரோனா வைரஸ் கூடுதல் கட்டணமாக 250 டாலர்களும் அடங்கும், ஒரு நபர் ஒரு குழந்தையை கவனித்துக் கவனித்துக்கொண்டால் அவரின் கட்டணம் 15 நாட்களுக்கு 862 டாலர்களாக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதல் காரணத்தினால் மக்கள் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய உதவிகளை குறைப்பது குறித்து ஆஸ்திரேலியா தொழிற்சங்க கவுன்சில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. குடும்பங்களின் நிதி பாதுகாப்பை மனதில் கொண்டு கொடுக்க வேண்டிய ஊக்க தொகைகள் அதிகரிக்க வேண்டும் என்று ACTU President Michele O’Neil கூறியுள்ளார்.

அரசு இரண்டு வாரங்களில் மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்க தயாராகி வருவதால், மக்களை மீண்டும் வேலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கிறது என்றும் கூறியுள்ளார்.