Breaking News

கொரோனா பாதிப்பு குறைந்ததால் ,கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது வடக்கு மாகாணம் !

கொரொனா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் , வடக்கு மாகாணம் விக்டோரியாவிற்கு பயணக் கட்டுபாடுகளை தளர்த்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து Melbourne நகருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

கொரொனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், இனி மற்ற மாநில மக்கள் தடையின்றி வடக்கு மாகாணத்திற்கு பயணம் செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.

மெல்பர்ன் புற நகரங்களில் Greater Geelong, Mitchel Shire, East Gipsland Shire ஆகிய நகரங்களை தவிர்த்து மற்ற நகரங்கள் சிகப்பு மண்டலங்களில் (hot spot area)இருந்து நீக்கப்படுகிறது. இந்த மூன்று நகரங்களில் சமூகப் பரவல் குறைந்துள்ளது என அறிக்கை வெளிவந்த பிறகு இன்னும் 4 வாரங்களில் சிகப்பு மண்டலத்தில் இருந்து நீக்கப்படும் என Mr Gunnar தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் விக்டோரிய மாநிலத்தில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தொற்றும் இல்லை,ஆகையால் விக்டோரியா கொரோனாவை நொறுக்கிவிட்டது என திரு Gunnar கம்பீரமாக தெரிவித்தார்.

விக்டோரியாவில் தொற்று 14 நாட்களில் சராசரியாக 0.3 cases உயர்ந்துள்ளது.மெல்பர்ன் நகரில் 11.6 ஆகப் பதிவாகியுள்ளது.
மெல்பர்ன் நகரில் செப்டெம்பர் 19 முதல் அக்டோபர் 2 வரை 13 மர்மமான வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. விக்டோரியாவில் அறவே இல்லை.

உலகத்தில் வேறெந்த நாடும் அழிக்காத கொரோனாவை விக்டொரியாவும் மெல்பர்னும் அழித்து நொறுக்கி விட்டது என Mr Gunnar தெரிவித்து உள்ளார்.

ஞாயிறு காலை 8 மணிவரை தற்சமயம் பாதிக்க பட்டவர்கள் என்று யாரும் இல்லை. இதற்கு முன் இருந்த 34 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பூர்ணமாக குணமடைந்து விட்டனர்.கடந்த பத்து நாட்களில் உள்ளூர் மக்களால் எந்த பரவலும் ஏற்படவில்லை. ஒரு வெளிநாட்டு பயணியால் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.தற்போது Queensland-ல் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.