Breaking News

கொரோனா பாதிப்பு குறைந்ததால் போக்குவரத்தில் சில மாற்றங்களை செய்ய முடிவு !

விக்டோரியாவில் மேலும் 14 பேருக்கு கொரோனா,8 பேர் மரணம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.அதனால் மாநில அளவில் இறப்பு எண்ணிக்கை 781 ஆகவும், தேசிய எண்ணிக்கை 869 ஆகவும் உள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், சாலை போக்குவரத்திலும் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது.

சில நாட்களுக்கு எந்த ஒரு பெரிய கட்டுப்பாடுகள் மாற்றங்களும் இருக்காது என்றும், அக்டோபர் 26 ஆம் தேதிகளுக்கு மே சில திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்றும் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமையன்று கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 14 ஆகவும் ,இறந்தவர்கள் எண்ணிக்கை 8 பேர் ஆகவும் பதிவாகியுள்ளன. இதன் மூலம், மாநில இறப்பு எண்ணிக்கை 781 ஆகவும் தேசிய எண்ணிக்கை 869 ஆகவும் உள்ளது.

மெல்போர்னில் கொரோனா 25.1 ஆகவும், விக்டோரியாவின் 0.8 ஆக கணிசமாக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கைகள் தற்போது மக்களையும்,அரசையும் பெருமூச்சு விட வைத்து உள்ளது.மெல்போர்னில் சில கட்டுப்பாடுகளை தளர்த்த நகரத்திற்குள் 30 முதல் 50 வரை தொற்றுகள் மட்டுமே இருக்க வேண்டுமென்று அரசு கூறியுள்ளது. திரு.ஆண்ட்ரூஸ் ஞாயிற்றுக்கிழமை புதிய விதிமுறைகளை உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்டுப்பாடுகளை தளர்த்துவதும்,கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளை பொருத்தே அரசு உத்தரவிடும், பாதிப்புகள் குறைந்தால் கட்டுப்பாடுகள் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.

கடந்த 6 தேதி அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி பள்ளிகள் திறப்பதும் , இரண்டு வீடுகளைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்றும் கட்டுப்பாடுகள் இருந்தது. வரும் சனிக்கிழமை இரவு கொடுக்கப்பட்ட மாற்றங்களை விட இன்னும் சில தளர்வுகள், மாற்றங்கள் புதிய விதிமுறைகள் இருக்கும் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை பற்றி தகவல்களைப் பற்றி கண்டறிந்ததாக ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளால் சீனியர் பள்ளி மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு அரசு கூடுதல் ஆதரவு கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

VCAL மாணவர்கள் தங்களின் படிப்புகளை முடித்து சான்றிதழ்களைப் பெற கூடுதல் உதவிகள் செய்யப்படும் என்றும், VET படிப்பை முடிக்க முடியாதவர்கள் TAFE நிறுவனத்தில் சேர்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. VCE மாணவர்கள் ஆண்ட்ரூஸ் அரசாங்கத்திற்கு நல்ல ஆதரவை கொடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.