Breaking News

கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது !

கணிசமாக குறைந்த புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை !அரசு தீவிர நடவடிக்கை !

கொரோனா தொற்று காரணமாக ,ஆஸ்திரேலியாவில் குடியேறும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், கட்டுமானத் துறையிலும் ,வீட்டுவசதி துறையிலும் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு சலுகைகளை நீட்டிக்குமாறு கட்டுமான தொழில் செய்பவர்கள் அரசாங்கத்தை அணுகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு வீட்டு தேவைகள் அனைத்தும் குறைக்கப்படும் என்று ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது, இதனைத் தொடர்ந்து வீடு கட்டும் திட்டத்தை அதிகரிக்குமாறு Scott Morrison கூறுகிறார். புதிய இடப்பெயர்வு திட்டத்தை அறிமுகம் செய்யவேண்டுமென்று ப்ராபர்டி கவுன்சில் (property council )வலியுறுத்தியுள்ளது.

2019 மற்றும் 2021 க்கு இடையில் மக்கள் தொகை வளர்ச்சி 214,000 குறைவு என்றும் ஒரு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.சர்வதேச எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டதால் இடம் பெயர்ந்தவர்களின் கூட்டு தொகை பெருமளவு குறைந்துள்ளது ,சுமார் 60 சதவீதம் வரை மக்கள் தொகை வளர்ச்சியை இது தடுக்கும் என்றும் கூறுகின்றனர்.

இதனால் வீட்டு வசதித் தேவைகள் அனைத்தும் 129,000 முதல் 232,000 வரை குறைக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர். இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் இனி, ஆசியாவிற்கு வர முடியாததால் ஏற்படும் பாதிப்புகளையும் தேசிய வீட்டுவசதி நிதி மற்றும் முதலீட்டு கழகங்கள் அரசுக்கு எடுத்து கூறி உள்ளது.

covid-19 காரணமாக இடம்பெயர்வு, அடிப்படை வசிப்பிட தேவைகள் அனைத்தும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு பெருமளவு பாதிப்பாக அமைந்துள்ளது என்று corporation’s chief executive -Nathan Dal Bon கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு வேலையின்மை விகிதமும், மாற்று விகிதமும் (exchange rate )அதிகமாக உதவும் என்று நிதி நெருக்கடியின் எடுத்துக்காட்டுகள் தெரிவிக்கின்றன. பெரிய நிதி நெருக்கடிக்கு பின்னர் , ஜி.எஃப்.சி(GFC) தனது முந்தைய நிலைக்கு வருவதற்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனது என்றும் அறிக்கைகள் கூறுகிறது.

இது குறித்து , Property Council chief executive- Ken Morrison கூறுகையில், வருமான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலை, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை அனுமதிக்க கூடாது, அவ்வாறு செய்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்க நேரிடும், இடம்பெயர்வு திட்டத்தை மறுபரிசீலனை செய்து தேசிய அமைச்சரவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.