Breaking News

கொரோனா பாதிப்பு இறப்புகள் 2 மில்லியன் வரை ஏற்படக்கூடும் என்று WHO எச்சரித்துள்ளது. தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடக்கின்றது.

கொரோனா பாதிப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லாததால், பலி எண்ணிக்கை 2 மில்லியன் வரை உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. எந்த நாடு தடுப்பூசியை கண்டுபிடித்தாலும் அது உலகிற்கு பகிர வேண்டும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் இந்த பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 2 மில்லியன்களை தாண்டியுள்ளது, இறப்பு எண்ணிக்கை மட்டும் ஒரு மில்லியனை நெருங்குகின்றன . இதனால் பெருமளவு நாடு முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததையும் அவர் கூறியுள்ளார்.மேலும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் பெருமளவு சீர்குலைந்து உள்ளன.

இந்த கொரோனா தொற்று குறைவில்லை என்றாலும், ஜப்பானின் புதிய prime minister Yoshihide Suga கூறுகையில் 2021ஆம் ஆண்டிக்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதற்கு ஜப்பான் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஒரு மில்லியன் இறப்பு என்பது சாதாரண விஷயமல்ல ,அது அதிகரிக்கும் முன்பு நாம் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று WHO’s emergencies director Michael Ryan கூறியுள்ளார். கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளையும் தாங்கள் எடுத்து வருவதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் பல இன்னல்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

covid-19 தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியையும் அனைவரும் எடுத்து வருவதாகவும், கண்டுபிடித்த பிறகு மருந்துகளை விநியோகம் செய்ய பல முயற்சிகளை இப்பொழுதே செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்தாண்டு நடக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ,ஆனால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டி கொரோனாவை வென்ற தன்னம்பிக்கை கொண்ட மக்களை காட்டும் என்றும் நம்பிக்கையாக கூறியுள்ளார்.

உலகிலேயே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா 7 மில்லியன் கொரோனா பாதிப்பை தாண்டியதால் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது – உலக மக்கள்தொகையில் நான்கு சதவிகிதத்தை மட்டுமே கொண்டிருந்த போதிலும்,உலகம் முழுவதும் உள்ள மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கின்றது என்பது வேதனையான விஷயம் .

இது ஒரு பக்கம் இருக்க , பல ஐரோப்பிய நாடுகள் புதிய தொற்றுநோய்களுடன் போராடி கொண்டு இருக்கின்றன.Beijingஇல் உள்ள தொழிற்சாலையில் SinoVac தயாரித்த COVID-19 க்கான SARS CoV-2 தடுப்பூசியின் பரிசோதனையை ஒரு தொழிலாளி செய்தார்.