Breaking News

கொரோனா பாதிப்புகள் NSW-விலிருந்து மற்ற எல்லைக்கு பரவ தொடங்கியுள்ளது ..விக்டோரியாவிற்கான எல்லையை மூடியது WA !

மேற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா உடனான எல்லை கட்டுப்பாடுகளை மீண்டும் பலப்படுத்துகிறது. மேலும் மாநிலத்தில் தொடர்ந்து 61 நாட்கள் எந்த கொரானா பாதிப்பும் இல்லாமல் இருந்தது .ஆனால் தற்போது கடந்த இரண்டு நாட்களில் 8 பேருக்கு COVID-19 தொற்றுகள் பதிவாகியுள்ளது.

விக்டோரியாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் NSW- லிருந்து திரும்பிய பயணிகளிடமிருந்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

விக்டோரியாவிலிருந்து Western Australia-விற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படாது என்றும் விலக்கு அளிக்கப்பட்ட பயணிகளைத் தவிர வேறு எந்த நபருக்கும் இனி Western Australia- விற்கு அனுமதி இல்லை என Acting WA Premier Roger Cook கூறினார். மேலும் டிசம்பர் 21 அல்லது அதற்குப் பிறகு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் COVID-19 அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சுகாதார மற்றும் சுற்றுச்சூழலின் அடிப்படையில் தற்போது விக்டோரியா மற்றும் Western Australia-வின் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாடுகளில் கடினமான சூழல் நிலவுவதாகவே Roger Cook தெரிவித்தார்.

டிசம்பர் 21 முதல் விக்டோரியாவிலிருந்து 16,000 அதிகமான மக்கள் Western Australia-விற்கு வந்திருக்கின்றனர். மேலும் Melbourne-லிருந்து பெர்த் விமான நிலையத்திற்கு சுமார் ஆயிரத்து 1500 பேர் 8 விமானங்களில் வந்தவர்களும் இதில் அடங்குவர். மேலும் Western Australia-விற்கு வரும் ஒவ்வொரு பயணியும் G2G pass கட்டாயமாக வைத்திருக்க வேண்டுமென WA Police Commissioner Chris Dawson கூறினார்.

NSW-வில் ஒரே இரவில் 10 புதிய COVID-19 தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் 5 தொற்றுகள் Avalon cluster-ருடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.அதில் 3 தொற்றுகள் Croydon cluster-ருடன் தொடர்புடையவை ,1 போக்குவரத்துக்கு ஊழியரிடம் தொடர்புடையது ஆகும் .