Breaking News

கொரோனா தொற்று அதிகரித்ததால் சிட்னிக்கான எல்லையை மூடியது விக்டோரியா !

சிட்னியில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், விக்டோரியா தனது எல்லைகளை மூடியது. இதனால் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாததால் ஏமாற்றமடைந்துள்ளனர். சிட்னி மற்றும் NSW மத்திய கடற்கரை பகுதிகள் ‘Red Zones’-என அறிவிக்கப்படுவதாக Victorian Premier Daniel Andrews தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் இருந்து Victoria வரும் பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொற்று அதிகரித்தலை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, கடினமாக இருந்ததாகவும், பல மக்களுக்கு இது அசௌகரியத்தை உண்டுபண்ணும் எனவும் தனது அறிக்கையில் Andrews தெரிவித்துள்ளார். NSW -ல் ‘Green Zones’ ஆக அறிவிக்கப்பட்ட பகுதியில் இருந்து வரும் பயணிகள், அனுமதியுடன் விக்டோரியாக்குள் நுழையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்னியில் இருந்து வரும் விக்டோரியா வாசிகள் கண்டிப்பாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 51 வது நாளாக விக்டோரியாவில் எந்த ஒரு தொற்றும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் NSW-ல் ஞாயிறன்று, மேலும் 30 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொது சுகாதார அதிகாரிகளின் அறிவுரையின்படியே, எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்துமஸ்க்கு முன்பாக திறக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

NSW -வின் நிலைமை தொடர்ந்து முன்னேறி வருவதாக Chief Health Officer Brett Sutton தெரிவித்துள்ளார். Northern Beaches பகுதிகளில்தான் அதிக அளவில் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதிகளுக்கு வெளியேயும் தொற்றுக்கள் பரவலாம் என்று தாம் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஞாயிறு அன்று கண்டறியப்பட்ட 30 தொற்றுகளில், 28 பேர் Avalon பகுதியை சார்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள இரண்டு பேர் பேரின் தொற்றின் பின்புலம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .