Breaking News

கொரோனா தாக்கம் பரவிக்கொண்டே இருப்பதனால் சிட்னியை சுற்றி வாழும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது !

கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் NSW-வை சார்ந்த மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த மூன்று பாதிப்புகளும் Northern beaches Avalon cluster நேரடி தொடர்பு கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

Northern beaches-இல் ஏற்பட்ட தொற்று தற்போது 129 ஆக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட சிட்னியில் இருக்கும் கொரோனா வைரஸ் இதனுடன் சமமாக இருப்பதாக Ms Berejiklian தெரிவித்துள்ளார்.அதனால் சிட்னியை சுற்றி வாழும் மக்களுக்கும், NSW மக்களுக்கும் அவர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சனிக்கிழமை அன்று Wollongong’s St Nektarios Greek Orthodox Church-க்கு காலை 9 மணி முதல் 10 மணி வரை மற்றும், அதே நாளில் Holy Cross Greek Orthodox Church-க்கு காலை 10.30 மணி முதல் 11 மணி வரை யாரெல்லாம் சென்று வந்தவர்களோ அவர்களையெல்லாம் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் படியும் ,தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்ளும் படியும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர யாருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளும்படி Ms Berejiklian தெரிவித்துள்ளார்.சிட்னியில் சுற்றி வாழும் மக்களுக்கு புகழ்பெற்ற புத்தாண்டு பட்டாசு திருவிழாவை காண தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்நகரத்தின் துறைமுகங்கள் முதன்முறையாக மூடப்பட்டுள்ளன.

புதிய 4 கொரோனா தொற்றுகள் திங்கட்கிழமையன்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது .மேலும் ஒரு தொற்று தற்பொழுது பரிசோதனையில் உள்ளது. சிட்னி துறைமுகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடும் புத்தாண்டு கொண்டாட்டமும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 909 ஆக உள்ளது. அதில் ஒருவர் NSW சார்ந்த 70 வயது முதியவர் கொரோனா பாதிக்கப்பட்டு மூச்சு விட சிரமப்பட்டு மார்ச் மாதம் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.