Breaking News

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு $6 மில்லியன் வரை நிதி வழங்கப்பட்டுள்ளது !

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு $ 6 மில்லியன் வரை நிதி கொடுக்கப்பட்டு உள்ளது .இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் Greg Hunt கூறுகையில், இந்த நிதித்தொகை கொடுக்கப்பட்டுள்ளதால், கொரோனா தடுப்பூசி தயார் செய்யும் வேலை வேகமாக நடக்கும் என்று நம்புகிறோம். ஆஸ்திரேலியாவில் மூன்று வகையான covid-19 தடுப்பூசி ஆராய்ச்சிகாகவும், அதன் மேம்பாட்டுக்காகவும் $ 6 மில்லியன் வரை கூடுதலாக முதலீடு செய்திருக்கிறது.

எதிர்கால மருத்துவ ஆராய்ச்சி நிதியிலிருந்து, மெல்போர்ன் பல்கலைக்கழகம் இரண்டு தடுப்பூசி வேட்பாளர்களை உருவாக்க கிட்டத்தட்ட $ 3 மில்லியன் வரை அரசிடமிருந்து பெறுகிறது. அதே போல் ,சிட்னி பல்கலைக்கழகம் covid-19 தடுப்பூசி பாதுகாப்பையும் அதன் செயலையும் சோதிப்பதற்காக கிட்டத்தட்ட $ 3 மில்லியன் பெறுகிறது.

இது குறித்து, சுகாதார அமைச்சர் Greg Hunt கூறுகையில், தற்போது இருக்கும் சூழ்நிலையில் covid-19 தடுப்பூசிகளின் வேகமான வளர்ச்சியும், அதன் பாதுகாப்பும் மற்றும் பயனும் தற்போது அரசாங்கத்தின் முக்கியமான முன்னுரிமை என்று கூறியுள்ளார். கண்டிப்பாக பல போராட்டங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசிகள் உலகெங்கிலும் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது விக்டோரியாவில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்திருக்கும் இந்நிலையில், வெறும் 14 பேருக்கு மட்டுமே தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மெட்ரோபொலிட்டனின் 14 நாளில் — 36.2 வீதம் வரை குறைந்துள்ளது, இது மாநில அளவில் 50ஐ விட குறைவாகும். இருப்பினும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது ,மேலும் ஐந்து இறப்புகள் தற்போது பதிவாகியுள்ளது. விக்டோரியாவின் இறப்பு எண்ணிக்கை தற்போது 762 ஆகவும், தேசிய எண்ணிக்கை 849 ஆகவும் இருந்தது.

விக்டோரியாவில் உள்ள குடும்பங்களுக்கும், குழந்தை பராமரிப்புக்கும் மத்திய மோரிசன் அரசாங்கம் கிட்டத்தட்ட $ 305 மில்லியன் நிதி உதவி அளித்துள்ளது. இந்த தொகை ஜனவரி 31, 2021 வரை விக்டோரியாவின் குடும்பங்களுக்கு பராமரிப்புத் தொகையாக அடங்கும், அதே சமயத்தில் ஆஸ்திரேலியன் குடும்பங்களுக்கு சில தளர்வுகளும் உள்ளது, கொரோனா காரணத்தால், செயல்பாட்டு நிலைகள் கொஞ்சம் மாறினால் ஏப்ரல் 4, 2021 வரை நீடிக்கப்படும்.

மேலும் ஏற்கனவே விக்டோரியாவின் குடும்பங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகளுக்கு மத்திய அரசு
$ 205 மில்லியன் நிதியுதவியும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.