Breaking News

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்துவது கடினம்-Daniel Andrews அறிக்கை !

விக்டோரியாவில் கோவிட் தொற்று இரண்டாம் கட்ட பாதிப்பு தொடர்வதால் அதை கட்டுப்படுத்த விக்டோரியன் premier Daniel Andrews நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.மக்களை நம்பிக்கையுடன் இருக்குமாறு திரு Andrews தெரிவித்தார்.

மேலும் இந்த தொற்று எண்ணிக்கையை விரைவில் குறைத்து, கொரோனா வைரசை விரட்டி அடிக்க வேண்டும்.இந்த இரண்டாம் கட்ட பாதிப்பை அழிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

விக்டோரியாவில் சனிக்கிழமையன்று 14 புது கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இறப்பு எதுவும் இல்லை.
மாநிலத்தின் இரண்டு வாரத்தின் தொற்று Melbourne-ல் 9.5சதவீதமாகவும்,விக்டோரியாவில் 0.4ஆகவும் பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரையிலுள்ள இறப்பு எண்ணிக்கை 897, அதில் 809 விக்டோரியாவில் பதிவாகியுள்ளது.செயலில் இருக்கும் தொற்று எண்ணிக்கை 192,அதில் 21 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.தொடர்ந்து 100வது நாளாக premier ஊடகங்களை சந்தித்து தொற்று நோய் பரவல் பற்றி பேசினார்.

முதல் சந்திப்பு ஜூலை 3-ல் நடைபெற்றது. அப்பொழுது 66 புது cases பதிவாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.அன்று முதல் தனசரி தொற்று எண்ணிக்கை சில சமயங்களில் 700 வரை உயர்ந்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு எண்ணிக்கை குறைந்தது, ஆனால் கட்டுப்பாடுகள் தொடர்ந்தது.

Chadstone Shopping centre, kilmore café, Box Hill hospital சம்பவங்கள் மூலம் பரவல்கள் ஏற்பட்டது.Box Hill cluster எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது .அதில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தில் இருந்து வந்ததாக சுகாதார அதிகாரி Bret Sutton தெரிவித்துள்ளார்.

Kilmore Café உடன் தொடர்புடைய தொற்றுகள் 6ஆக உயர்ந்துள்ளது.Chadstone shopping centre-ல் தொடர்புடைய எந்த புதிய தொற்றும் இதுவரை பதிவாகவில்லை.