Breaking News

கொரோனாவை விரட்டும் முயற்சியில் ஆஸ்திரேலியாவின் உற்பத்தித் துறை $1.5 பில்லியன் ஊக்கத்தொகை பெறுகின்றது !

ஆஸ்திரேலியாவில் ஆறு முக்கியமான பகுதிகளில் உற்பத்தியாளர்களின் விரிவாக்கத்திற்காக 1.5 பில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் ஊக்கத்தொகையாக கொடுக்கப்படுகிறது.கடந்த பத்து ஆண்டுகளாக கூட்டணிக் கட்சி, உற்பத்தியாளர் துறைக்கு கவனம் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் விவாதித்தனர்.

வியாழன் அன்று Canberra-வில் நடந்த National Press Club-ல் கூட்டணியின் உற்பத்தி திட்டம் பற்றி Scott Morrison எடுத்து காட்டினார்.மேலும் “நாம் ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்வோம், சிறப்பாக செய்வோம், தொடர்ந்து செய்வோம்” என்றார்.

இத்திட்டம்,சுரங்கப் பணி, உணவு மற்றும் குடிநீர் பொருட்கள், மருத்துவம், மறுசுழற்சி தயாரிப்புகள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகிய துறைகளை இலக்காக கொண்டுள்ளது.தொழில் துறை வல்லுனர்கள் அடுத்த பத்தாண்டிற்கான செயல் திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரையறுப்பார்கள்.

அரசு, மூன்று உற்பத்தி துறையைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களுடன் கூட்டமைப்பதற்காக 1.3 பில்லியன் டாலர்கள் செவ்வாய் அன்று பட்ஜெட்டில் ஒதுப்பட உள்ளது.அதில் ஒருவர் வணிகங்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையிலான கூட்டணிக்கு தேவையான மானியங்களை ஏற்பாடு செய்வார்.மற்றொருவர் உற்பத்தியாளர்களின் யோசனைகளை தயாரிப்புகளாக மாற்றுவார்.
மேலும் ஒருவர் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுக்கு இடையே பாலமாக இருப்பார்.

உற்பத்தி துறை, எரிசக்தி, தொழில்முறை உறவுகள், வரி, வேலை செயல்திறன் மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கையுடன் ஆதரிக்கப்பட வேண்டும் என Mr Morrison குறிப்பிட்டார்.கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, பழைய அறிவிப்புகளை புறந்தள்ளிவிட்டு இப்பொழுது உற்பத்தி துறையில் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை ஆஸ்திரேலியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் Mr Morrison வற்புறுத்தி உள்ளார்.

தொழில்துறை அமைச்சர் (Industry Minister) Karen Andrews இது குறித்து பேசுகையில்,” இந்த அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக உற்பத்தித் துறையில் தோல்வியை சந்தித்துள்ளது. அவர்களது சிந்தனை பழமை வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.இத்திட்டத்தில் மேலும் 107.2 மில்லியன் டாலர்கள் மருத்துவத்திற்கும், அதனை தொடர்ந்து உணவு, ரசாயணம் மற்றும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கும் வழங்கப்படும்.

உற்பத்தி துறையை நவீனப்படுத்த மேலும் 52.8 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும்.இந்தத் திட்டத்தின் மூலம் 150 உள்ளூர் வணிகர்கள் புதிதாக முதலீடு செய்து பயனடைவார்கள்.