Breaking News

குறைந்த விகிதத்தில் ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்பு விளம்பரங்களால் இடம்பெயர்தொழிலாளர்கள் பாதிப்பு

சட்டவிரோதமாக குறைந்த அளவு விகிதத்தில் ஊதியம் வழங்கும் வெளிநாட்டு மொழி வேலைவாய்ப்பு விளம்பரங்களால் , இடம் பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Chinese, Korean, Vietnamese, Nepali, Spanish மற்றும் Portuguese மொழிகளில் வெளிவந்த 3000 வேலைவாய்ப்பு விளம்பரங்களில் நடைபெற்ற ஆய்வில், 88% பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்திற்கு கீழே வழங்கப்பட்டுள்ளன என என்ன NSW யூனியன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கொரோனவைரஸ் சமூக பரவல் காலத்தில், பணியாளர்களின் மீதான சுரண்டல் பயமுறுத்தும் அளவில் அதிகரித்து வருகின்றது என Unions NSW Secretary Mark Morey தெரிவித்துள்ளார். பணமின்மை மற்றும் வேலையின்மை என்று அல்லாடும் மக்களின் நிலையை , தங்களுக்கு சாதகமாக இந்த முதலாளிகள் பயன்படுத்த இந்த Covid காலம் உதவுகிறது. Visa -வில் வந்து தங்கியிருக்கும் பணியாளர்கள் மீதான சுரண்டலுக்கு, இந்த காலகட்டத்தை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த முயற்சியை தோல்வியடையச் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் சட்டவிரோதமாக குறைந்த அளவில் சம்பளம் வழங்கும் வேலைவாய்ப்பு விளம்பரங்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

Vietnamese மொழியில் வரும் 99 சதவீத வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறைந்த அளவிலான ஊதியத்தை வழங்குகின்றன. மேலும் Korean மற்றும் Chinese மொழியில் வெளிவரும் 88 சதவீத வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறைந்த அளவிலான ஊதியத்தை வழங்குகின்றன. 86% Nepali மொழி விளம்பரங்களும், 84% Portuguese மொழி விளம்பரங்களும் 76% Spanish மொழி விளம்பரங்களும் இந்தப் பட்டியலில் அடங்கும்.

இடம் பெயர் பணியாளர்களை பாதுகாப்பதற்கான கோரிக்கை

முதலாளிகளால் குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதின் மூலம் ஏற்படும் அபாயங்கள் என்னவென்று நமக்குத் தெரியும் என சீனாவைச் சேர்ந்த ஒருவர் விவரிக்கிறார். கடந்த ஆண்டு Sydney-ல் உள்ள ஒரு Chinese Restaurant -ல், பணியில் சேர இவர் கட்டாயப்படுத்த பட்டதாகவும், குறைந்த அளவிலேயே வேலைவாய்ப்புகள் இருந்ததால், இவருக்கு மணிக்கு $13 வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் . ஆஸ்திரேலியா வந்தபின் நல்ல ஒரு வேலை கிடைக்காததால் இந்த வேலையில் சேர்ந்ததாகவும், இந்த வேலையை விட்டு இங்கிருந்து எப்படி செல்வது என்று தெரியாததாலும் அவர் தனது கவலையை தெரிவிக்கிறார். இவர் பணியில் சேர்ந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவில் குறைந்தபட்சம் ஊதியம் என்னவென்றும், பணியாளர்களின் உரிமை என்னவென்றும் இவருக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதலாளிகளை கட்டுப்படுத்த சட்டங்கள் வேண்டுமென்றும் ,அவ்வாறு சட்டங்கள் உருவாக்கப்பட்டால்தான் இவர்கள் பணியாளர்களை சுரண்ட மாட்டார்கள் என்றும் தனது விருப்பத்தை அவர் தெரிவித்தார்.

குறைந்த அளவு ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மீது தடை உட்பட, பல பணி நிறுவன சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. வெளிநாடு மாணவர்களுக்கு வாரத்திற்கு 20 மணி நேர வேலை என்பதை நீக்க வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மாணவியான Iris Yao, அவர் வேலை செய்யும் Chinese Restaurant -ல் , அவருக்கு $ 7 மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார். ஊதிய சுரண்டல் என்பது மிக கடுமையான பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் . வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் குறைந்த பட்ச ஊதியம் என்னவென்று கொண்டால் மட்டுமே அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Corona Virus -னால் ஊதிய சுரண்டல் அதிகரிப்பு

Federal அரசின் Jobseeker மற்றும் Jobkeeper உதவி திட்டத்தின்கீழ், தற்காலிக இடம்பெயர் தொழிலாளர்கள் தகுதி இல்லாதவர்கள் என்பதால் , இந்த சுரண்டல் அதிகரிப்பிற்கு வழிவகுப்பதாக Unions NSW தெரிவிக்கிறது. Corona Virus தாக்கத்தினால் மிக மோசமான நெருக்கடி நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நெருக்கடி நிலை, விசாவில் இருக்கும் இடம்பெயர் பணியாளர்களை, பிழைப்புக்காக எந்த வேலையையும் செய்ய தள்ளியது என Mr.Morey தெரிவித்தார். Corona virus சமூகப் பரவலினால், ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்ட முடக்கத்தினால் , பல வர்த்தகங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட விளைவினால், பல இடம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்து தவித்தனர்.

Covid-19 சமூகப் பரவல் தாக்கத்தினால் Fair work Ombudsman (FWO) விசாரணையில் ஏற்பட்ட தொய்வு, ஊதிய திருட்டை இன்னும் அதிகப்படுத்தி இருக்க வேண்டுமென்று இந்த Union தெரிவித்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, 2020 ஆம் ஆண்டில் சில மாதங்களாக பணி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய, ஆய்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக FWO தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் சரியான முறையில் பணி நிறுவன சட்டங்கள் தொடர்ந்து அமலில் இருந்து வருகின்றன என FWO Spokesperson தெரிவித்தார். எளிதாக சுரண்டலுக்கு ஆளாவதால், இடம்பெயர் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 2019 -20 ஆம் ஆண்டில் 24 வழக்குகளை தொடங்கி, அதன்மூலமாக $ 1.7 Million-ஐ இந்த பணியாளர்களுக்கு மீட்டுக் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்ட அபராதத் தொகையாக $3 Million -ம் இது பெற்றுக் கொடுத்தது. ஊதிய திருட்டை ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதி, அதற்கு 4 வருட சிறைத்தண்டனை வழங்க சட்ட சீர்திருத்தத்தில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக Federal அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த சட்டத்தின்படி தனிப்பட்ட ஒருவருக்கு $ 1.1 million அபராதமும் நிறுவனங்களுக்கு $ 5.5 million அபராதமும் விதிக்கலாம். குறைவான ஊதியம் வழங்கினால் அதற்கான அபராத தொகை 50% அதிகப்படுத்த தொடும் என்றும் தெரிவித்தார்.

இடம்பெயர் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களை சுரண்டுவதற்கு எதிரான, புதிய முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த சட்ட சீர்திருத்தத்தில் அடங்கியுள்ளன என்று Christian Porter தெரிவித்தார். வேலைவாய்ப்பு விளம்பர விதிகளை பின்பற்றாதவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதியப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பணியாளர்கள் தொடர்ந்து இந்த வகையான சுரண்டலுக்கு ஆளாகி வருகின்றனர் என Tony Burke தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் பல தொழிலாளர்கள் குறைவான ஊதியம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். பல நிறுவனங்களில் மற்றும் பணிபுரியும் இடங்களில், இந்த ஆய்வு கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்பட்டது. ஆனால் தோட்டக்கலை துறை வேலைவாய்ப்பு விளம்பரங்கள்ப்பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.