Breaking News

குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தில் ஸ்காட் மோரிசன் கார் சேதம் ! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் !

குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தில் அகதிகளின் உரிமைக்காக போராடும் போராளிகள் , Prime Minister Scott Morrison-ன் காரில் சிவப்பு பெயிண்டை சிதறடித்துள்ளனர்.அது பார்ப்பதற்கு ரத்தம் போல் காட்சி அளித்ததால் ,அந்த இடத்தில் பதற்றம் நிலவியது. உடனே காவலர்கள் அவரை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர்.

போராட்டகாரர்கள் அகதிகளை விடுவிக்கக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.பல்கலைகழகத்தின் வெளியே இந்தப் போராட்டம் தொடங்கியது.அந்த நேரத்தில் தான் Morrisonனின் கார் சேதப்படுத்தப்பட்டது. பின்னர் Morrison போலீஸ் வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த போராட்டம் வருத்தமளிப்பதாக திரு.மோரிசன் தெரிவித்தார்.அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்காக இந்த போராளிகள் பல காலமாக மோரிசன் அரசை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு குடிவரவு அமைச்சராக இருந்த திரு மோரிசன், புலம்பெயர்ந்தர்வகளின் படகு போல் வடிவம் கொண்ட கேடயம் வைத்திருந்தார்.அதில் “இந்த புலம்பெயர்தலை தடுத்தவன்” என்று அச்சிடப்பட்டிருந்தது.அது சர்வதேச அரசுகளின் கவனத்தையும் ஈர்த்தது.

சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை தடுப்பு சேவை மையம் நடத்திய நிகழ்வில் பேசிய மோரிசன், Australian Offshore Processing centre-ல் புகலிடம் வேண்டும் என கோரிக்கை வைத்த இளைஞர்களின் அவல நிலையைக் கண்டு மனம் வருந்தியதாகக் கூறினார்.

எல்லை பாதுகாப்பு பெரிய தலைச்சுமை என்றும் அதனை சமாளிப்பது எளிதல்ல என்றும் தெரிவித்தார்.2012இல் Gilliard Labor அரசு வந்த பிறகு இதுவரை பதிமூன்று பேர் Australian Processing centre-ல் இறந்துள்ளதாக ஆஸ்திரேலிய refugee council தெரிவித்துள்ளது.