Breaking News

குயின்ஸ்லாந்து தேர்தல் முடிவுகள் !

குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது.அதில் ஆளும் கட்சியான லேபர் கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

ஒரு கட்சி ஆட்சி அமைக்க மொத்தம் 93 இடங்களில், 47 இடங்களையாவது கைப்பற்ற வேண்டும்.அதன்படி கடந்த முறை லேபர் கட்சி 48 இடங்களை கைப்பற்றி தனது ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது லேபர் கட்சியும், கிரீன்ஸ் கட்சியும் போட்டியிட்ட நிலையில், யார் வெல்வார் என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது .இந்நிலையில் சென்ற முறை, கைப்பற்றிய இடங்களை விட இந்த போட்டியில் லேபர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றுமா என்று பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் Paulin Hanson கட்சியான One Nation கட்சி பெற்ற வாக்குகளை விட இம்முறை அக்கட்சி பெற்ற வாக்குகள் கிட்டதட்ட 6 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது.

One Nation கட்சி பல தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றாலும், அதற்கு அடுத்தபடியாக Preference-இல் இருக்கும் எதிர்க்கட்சியான The Liberal National கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அந்த எதிர்பார்க்கும் தோல்வியில் தான் முடிந்தது.

LNP ( The Liberal National Party ) கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களை கைப்பற்றியது. ஆனால் ஒரு கட்சி சுயேட்சையாக ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 47 இடங்கள் தேவை என்பதனால் ,அக்கட்சி 8 இடங்களை அதிகமாக கைப்பற்ற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டது. LNP தலைவி Deb Frecklington வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

ஆனால்,Premier Annastacia Palaszczuk பெரிய அளவில் வெற்றி பெற முடியாவிட்டாலும் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறார் என்று அரசியல் ஆய்வாளர்கள் தங்களது முடிவை அறிவித்தார்.

ஆளும் கட்சியான லேபர் கட்சிக்கு இம்முறை கிடைத்திருக்கும் இந்த தோல்வி லேபர் கட்சியின் South Brisbane தொகுதி வேட்பாளர் Jackie Trad அடைந்திருக்கும் தோல்வி ஆகும் . அவர் கிரீன்ஸ் கட்சி வேட்பாளர் Amy MacMahonயிடம் தோல்வியடைந்துள்ளார்.

Jackie Trad முன்னாள் துணை Premierஆக இருந்தார். சமீபத்தில் அவர் சில சர்ச்சையில் சிக்கியதால் பதவி விலகுவதாகவும் கூறியுள்ளார்.