UK தொற்றுடன் சம்மந்தப்பட்ட 6 பேரும் ஒரே மாடியில் இருந்தவர்கள் என்று தெரிந்தவுடன் ,குயின்ஸ்லாந்து அரசாங்கம் அந்த ஹோட்டலை மூட முடிவெடுத்துள்ளது .Brisbane’s Grand Chancellor ஹோட்டலில் ஏழாவது மாடியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
அங்கு ஏற்கனவே இருக்கும் 129 பேரும் பரிசோதனை செய்யப்பட்டு வேறு ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது .டிசம்பர் 30 முதல் அங்கு பணிபுரிந்த 226 பேருக்கும் சோதனை செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளிவந்து உள்ளது .
இதற்குமுன் ஏற்பட்ட தொற்றை விட இந்த தொற்று மாறுபட்டு இருப்பதனால் சமூகத்தில் இது பரவுவதை தடுக்கவேண்டும் என்றும் ,இதற்கு முன் இது போல் உள்ள நோய்த்தொற்றை சமாளிக்கவில்லை என்றும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக Ms Palaszczuk செய்தியாளர்களிடம் கூறினார் .
இந்த புது தொற்று குறித்து தலைமை சுகாதார அதிகாரி Jeannette Young கூறுகையில்,இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த தனிமைப்படுத்தப்பட்ட ஒருவரிடமிருந்து ஹோட்டலில் ஒரு துப்புரவாளருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்று அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.
பிரிஸ்பேனில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக முழு நகரத்திற்கும் 3 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்று அவர் கூறினார் .ஹோட்டலில் பணியில் இருக்கும் அனைத்து பாதுகாப்புப் படையினர், போலீஸ் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஊழியர்கள், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறியவர்கள் உட்பட தொடர்பு கொள்ளப்படுவதாக Dr Young கூறினார்.குயின்ஸ்லாந்தில் தற்போது தொற்றின் எண்ணிக்கை 26ஆக உள்ளது .